13 நாட்களுக்கு முன்பே எப்படி? பலித்தது ஜோதிடர் கணிப்பு! அகமதாபாத் ஏர் இந்தியா போயிங்கில் நம்ப முடியல
சென்னை: அகமதாபாத் விமான விபத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாமல் உள்ளது.. விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.. விமானத்தின் கருப்பு பெட்டியிலிருநது ஆய்வுகள் நடந்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக சாமியாரும், பெண் ஜோதிடரும், விமான விபத்தை முன்கூட்டியே கணித்து கூறியிருந்தார்களாம்.. இதுகுறித்த செய்திகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 - 8 டிரீம் லைனர் விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.. கிளம்பிய 30 வினாடிகளில், மருத்துவ கல்லூரியின் விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது..

கருப்பு பெட்டி - விசாரணை
இதில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்கிற பயணி மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார். மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டு, விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க, உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது.
வழிகாட்டுதல்கள்
இந்த குழுவானது விபத்துக்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்காலத்தில் விமான விபத்துக்களை தடுக்கவும், திறம்பட நிர்வகிக்கவும் ஒரு உறுதியான கட்டமைப்பை பரிந்துரைப்பதே இந்தக் குழுவின் முதன்மை நோக்கம் என்றும் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உறுதி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விமான விபத்து பற்றி முன்கூட்டியே பெலகாவியை சேர்ந்த சாமியார் ஒருவர் கணித்து கூறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்திலுள்ள டவுன் நயாநகரில், சுக்தேவானந்தா சுவாமி மடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி.
அருள்வாக்கு சொன்ன சாமியார்
கடந்த ஏப்ரல் 20-ந்தேதி இந்த மடத்தின் திருவிழா நடைபெற்றது. அப்போது, அபிநவ சித்தலிங்க சுவாமிஜி, எதிர்காலத்தை கணித்து அருள்வாக்கு கூறியிருந்தார்... அதில், இனிவரும் நாட்களில் பலத்த தீவிபத்து ஏற்படும். முக்கியமாக விமான விபத்து ஏற்படும், அந்த விபத்தில் பயங்கரமான தீப்பிடிக்கும். ஒரு நகரமே நாசமாகும் என்றெல்லாம் கூறியிருந்தார்.
இப்போது, அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து பற்றி தான் சாமியார் கணித்து சொன்னதாக, அங்குள்ள பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 20-ந்தேதி, சாமியார் கணித்து கூறியிருந்த அருள்வாக்குதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே இதுபோலவே, இதே விமான விபத்து குறித்து பிரபல பெண் ஜோதிடர் சர்மிஸ்தா என்பவர் கணித்திருந்தாராம்.
தலைப்பு செய்திகள்
அப்பெண் ஜோதிடர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "கடந்த டிசம்பர் மாதம், எக்ஸ் பக்கத்தில், "2025ம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சிறப்பாக செயல்படும். மேலும் விமான விபத்து தலைப்புச் செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடும், இதை இரண்டு மாதங்களுக்கு முன்பே கணித்தேன்.
நம்முடைய விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்கனவே சிறிது முன்னேற்றம் தொடங்கிவிட்டது. குரு மிதுன ராசியில் மிருகசீரிஷம் மற்றும் ஆருத்ராவின் மிதுனப் பகுதியில் மாதத்திற்கு சுமார் 6.5 டிகிரி வேகத்தில் இருக்கும்போது, விமானப் போக்குவரத்து செழிக்கும், ஆனால் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்'' என்று பதிவிட்டிருந்தார்.
மீண்டும் கணித்து சொன்ன பெண்
இந்த ட்வீட்டை, மீண்டும் மேற்கோள் காட்டி, கடந்த ஜூன் 5ம் தேதி மற்றொரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார்.. அதில், ''டாடா நிறுவனம், ஹைதராபாத்தில் ரஃபேல் விமானத்தின் உடல் பகுதியை உருவாக்கும். இஸ்ரோ விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் பொறியியல், விண்வெளி சுற்றுலா ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகளில் உலகையே பிரம்மிக்க வைக்கும்.
இது கடந்த வருடம் நட்சத்திரங்களின் நகர்தல் மூலம் கணிக்கப்பட்டது. 2025ம் ஆண்டில் விமான விபத்து குறித்த எனது கணிப்பை நான் இன்னும் உறுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று ஜோதிடர் சர்மிஸ்தா பதிவிட்டிருக்கிறார்.
கர்நாடக சாமியாரும், பெண் ஜோதிடரும், விமான விபத்தை முன்கூட்டியே கணித்து கூறியிருந்த செய்திகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications