விமானத்தில் போன எல்லோரும் பலியாக.. அசால்ட்டாக நடந்து வந்த 1 நபர்.. பிழைத்தது எப்படி? என்ன செய்தார்?

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 1 பயணியை தவிர மற்ற எல்லோரும் பலியான நிலையில் அந்த 1 பயணி எப்படி உயிர் பிழைத்தார், எப்படி தப்பித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா உயிர் தப்பினார். விமானத்தில் 242 பேர் இருந்தனர். 241 பேர் இதில் பலியானார்கள்.

ரமேஷ், அவசர வழியின் பின்புறம் இருந்த 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்தார். மதியம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நடந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் காயமடைந்த ரமேஷ் ஆம்புலன்ஸை நோக்கி நடந்து செல்கிறார். மற்றவர்களின் நிலை குறித்து அங்கிருந்தவர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

Ahmedabad Air India Plane Crash How did the one person survive in this major accident

விபத்தில் உயிர் பிழைத்தவர்

ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்ததாக அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியது. "11ஏ இருக்கையில் பயணி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழப்புகள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்" என்று மாலிக் கூறினார்.

அவசர வழியை ஒட்டிய 11ஏ இருக்கை

ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11ஏ இருக்கை எகானமி வகுப்பில் முதல் வரிசையில் உள்ளது. இந்த ஜன்னல் இருக்கை விமானத்தின் வலது பக்கத்தில் உள்ளது. மேலும், விமானத்தின் இறக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்னதாக உள்ளது. நெருக்கடியான சமயங்களில் வெளியேறும் அவசர வழியை ஒட்டியே இந்த 11ஏ இருக்கை அமைந்துள்ளது.

எப்படி தப்பித்தார்

விபத்து நடக்கும் சில நொடிகளுக்கு முன் பயணிகளிடம் எமர்ஜென்சி தகவல் விதிப்படி தெரிவிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி அந்த பயணி உஷாராக இருந்துள்ளார். சீட் பெல்ட் அணியாத இவர்.. விமானம் தரைக்கு அருகே வந்து சரியாக மோதும் நொடி.. சுதாரித்துள்ளார். விமானத்தில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி அதன் வழியாக அப்படியே எகிறி குதித்து காயங்களோடு பிழைத்துள்ளார்.

லண்டன் கேட்விக்கிற்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. விமானம் 625 அடி உயரம் மட்டுமே எட்டியபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக ராடார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விடுதி மீது மோதியது.

230 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 1:39 மணிக்கு விமானம் புறப்பட்டது. புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விபத்தில் 204 பேர் உயிரிழந்ததாக அகமதாபாத் காவல் ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் தகவலுக்கு ஏர் இந்தியா ஒரு உதவி எண்ணை அமைத்துள்ளது. பயணிகள் 1800 5691 444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வெளிநாட்டு குடிமக்கள் +91 8062779200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+