ஐடி துறைக்கு மெகா ஆப்பு..காலியாக போகும் 5 லட்சம் வேலைகள்! ட்ரம்ப் விதித்த வரியால் இப்படி ஒரு ஆபத்தா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஐ வருகைக்கு பிறகு ஐடி துறையில் பணிநீக்கம் என்பது சாதாரணமாகிவிட்டது. பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் வரிவிதிப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக பாதிப்புகள் அதிகமாகும் என்கின்றனர்.

உலக அளவில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவான ஏஐ வந்த பிறகு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோய் வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் ஏஐ ஆதிக்கம் அதிக அளவில் இருக்கிறது.

ஏஐ வருகைக்குப் பிறகு ஐடி துறையில் புரட்சி ஏற்பட்டாலும் அதற்கேற்றார் போல் தங்களை அப்டேட் செய்து கொள்ளாதோர் தொழில்நுட்ப நிறுவனங்களால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன.

AI Impact and Trump Tax

ஏஐ வேலை இழப்பு

ஏற்கனவே கூடுதல் வேலை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஐடி ஊழியர்கள் தற்போது பணி நீக்க அறிவிப்பால் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். மெட்டா, டெல், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இதுவரை 60,000 மேற்பட்ட ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளன. இதற்கிடையே அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பின் நடவடிக்கை காரணமாகவும் ஐடி துறையில் வேலை இழப்பு அபாயம் இருக்கிறது என்கின்றனர். ஐடி துறையை பொறுத்தவரை வரிவிதிப்பால் நேரடியாக தாக்கம் இல்லாவிட்டாலும் மறைமுகத் தாக்கம் இருக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

ஐடி பணி நீக்கம்

ஐடி துறை நேரடியாக அமெரிக்காவின் புதிய வரி விதிப்பின் கீழ் வருவதில்லை என்றாலும், செலவுகளை கட்டுப்படுத்த ஐடி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுக்கலாம் என சொல்லப்படுகிறது. டிசிஸ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே ஏஐ மாற்றம் காரணமாக 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ள நிலையில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், டெஸ்டிங், கோர்டெக்னிக்கல் இல்லாத ஊழியர்களின் வேலைவாய்ப்பு ஆபத்தில் இருக்கிறது.

டிரம்ப் வரி விதிப்பு

அந்த வகையில் இந்தியாவின் ஐடி மற்றும் பிபிஓ துறையில் சுமார் 5 லட்சம் பணிகள் ஆபத்தில் இருப்பதாக ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் தொழில்நுட்ப துறையின் மீது நேரடி தாக்கம் இல்லாவிட்டாலும் வரி விதிப்பு அழுத்தம் மற்றும் நிலைத்தன்மை இல்லாததன் காரணமாக இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் மந்த நிலையை எதிர்கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதனால் இறக்குமதி பொருட்கள், ஏஐ மாடல்கள், வர்த்தக உறவு சிக்கல் உள்ளிட்டவை ஏற்படலாம்.

பொருளாதார மந்தம்

மேலும், இந்தியாவுக்கான அமெரிக்காவின் ஆர்டர்கள் குறையும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஏஐ தாக்கம் காரணமாகவே இந்தியாவில் ஐடி வேலைகள் பறிபோவதாக சொல்லப்பட்டாலும், டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் சில அமெரிக்க நிறுவனங்கள் ஆஃப்ஷோர் ( வெளிவேலை) திட்டங்களை தள்ளிப் போட்டுள்ளன. மேலும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொடக்கம் தள்ளிவைப்பு, நிதி பற்றாக்குறை, வருமானசரிவு ஆகியவையும் வரும் காலங்களில் வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயத்தை மேலும் அதிகப்படுத்தும் என்கின்றனர் உலகளாவிய பொருளாதார நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+