ஐடி துறைக்கு தான் ஆப்பு.. காலியாகப் போகும் 20 லட்சம் வேலைகள்! ரொம்ப காலம் ஆகாது.. பறந்த வார்னிங்
சென்னை: உலக அளவில் பொருளாதார நெருக்கடி, ஏஐ தாக்கம் உள்ளிட்டவை காரணமாக ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து வருகின்றனர். குறிப்பாக ஐடி துறையில் நாளுக்கு நாள் பணி நீக்க அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இந்திய தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி, தற்போது இந்தியாவின் டெக் துறையில் சுமார் 80 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விரைவாக முன்னேறி வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதிலிருந்து சுமார் 20 லட்சம் வேலைகள் அழியக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், AI துறையில் புதிய திறன்கள் உருவாகுவதால் புதிய 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பி.வி.ஆர். சுப்பிரமணியம் "நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் உங்கள் வேலைகள் பறிபோகும்.

ஏஐ வேலை இழப்பு
இது வெறும் 20 லட்சம் பேர் என்ற அளவோடு நிற்காது. அந்த வேலைகள் சார்ந்த 2 முதல் 3 கோடி மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். நாம் 8 மில்லியனில் இருந்து 6 மில்லியனாக குறையப் போகிறோமா? அல்லது 10 முதல் 12 மில்லியனாக உயரப் போகிறோமா? என்பது இன்று எடுக்கும் முடிவுகளையே சார்ந்தது. வேலைகளின் தன்மை மாறுகிறது, திறன்கள் மாறுகின்றன, எனவே நாம் உடனடியாக திசைமாற்றம் செய்ய வேண்டும். இந்த மாற்றத்தை ஒரு வாய்ப்பாக மாற்ற நிதி ஆயோக் 'தேசிய AI திறன் மிஷன்' (National AI Talent Mission) எனும் திட்டத்தை பரிந்துரைத்துள்ளது.
அலறும் ஐடி ஊழியர்கள்.. டிசம்பருக்குள் 50,000 பேரை பணி நீக்கம் செய்யும் IT நிறுவனங்கள்!
நிதி ஆயோக் அறிக்கை
இந்தியாவை உலகின் AI தொழில்நுட்ப மனிதவள மையமாக மாற்றுவது இதன் நோக்கமாகும். NASSCOM மற்றும் BCG இணைந்து உருவாக்கிய "Roadmap for Job Creation in the AI Economy" என்ற இந்த அறிக்கை, அரசு, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இந்திய இளைஞர்களை AI ஆராய்ச்சி மற்றும் புதுமை துறையில் முன்னேற்ற வேண்டும் என பரிந்துரைக்கிறது. ஒரு நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் 20,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இதே நிலை அடுத்த காலாண்டிலும் தொடரும். இதை மறுக்க முடியாது.
டிஜிட்டல் திறன்
நான் சமீபத்தில் ஒரு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட போது மாணவர்களின் முகங்களில் வெறுமை தெரிந்தது. முன்னர் ஒரு முழு பேட்ச் மாணவர்கள் ஐடி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டார்கள். ஆனால் இப்போது, சில கல்லூரிகளில் 60% மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்தியாவின் வலிமை அதன் மக்கள்தான். நமக்கு 9 மில்லியனுக்கும் மேற்பட்ட டெக் மற்றும் கஸ்டமர் அனுபவ நிபுணர்கள் உள்ளனர். உலகில் மிகப் பெரிய டிஜிட்டல் திறன் கொண்ட இளைஞர்கள் நம்மிடம் உள்ளனர்" என்றார்.
செயற்கை நுண்ணறிவு இந்தியா
மேலும்," இப்போது நமக்கு தேவை வேகம், பார்வை, மற்றும் ஒருங்கிணைப்பு வேலை இழப்பு அல்லது வேலை உருவாக்கம் ஆகிய இரண்டுமே நம்முடைய இன்றைய முடிவுகளில்தான் இருக்கிறது. சரியான திசை எடுத்தால், 2035க்குள் இந்தியா உலகின் செயற்கை நுண்ணறிவு மையமாக மாறும்," என நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் தேவஜானி கோஷ் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications