மோடி பாடி லாங்குவேஜ்.. உலக நாடுகளுக்கு காட்டித்தந்த ஏஐ.. "அவர்" இருந்திருந்தா இப்படி நடந்திருக்காதே
சென்னை: மோடி பேசியது வெறுப்பு கருத்துதான் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்லாமியர்கள் பற்றி மோடி பேசியதை ஆய்வு செய்து உள்ளனர், என்று மூத்த பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் பற்றி மேடைக்கு மேடை பேசுவது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் வாக்குறுதி குறித்தோ, 10 ஆண்டுகள் சாதனை பற்றியோ பேசாமல் மோடி திடீரென இஸ்லாமியர்களுக்கு எதிரான புதிய பிரச்சார வியூகத்தை கையில் எடுத்து இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

என்ன சொன்னார்?: ராஜஸ்தானில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.
இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
கடுமையான சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.
மோடி பேச்சு விமர்சனம்; மோடியின் இந்த பேச்சு தொடர்பாக என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
இஸ்லாமியர்களை பற்றி பேசி ஒரு ரோடு மேப்பை மோடி உருவாக்கிவிட்டார். மீண்டும் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுகிறார். 10 ஆண்டு சாதனைகள் பற்றி பேசியும் கூட வாக்குகளை கேட்க முடியவில்லை. அதனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் தகவல்களை பொய்யாக மாற்றி மாற்றி மோடி பேசுகிறார்.
யாரும் பேச தயங்கும் பொய்யான தகவல்களை மோடி பேசுகிறார். பிடிஆர் ரெஸ்ட் இந்த பீஸ் என்று போட்டு இருந்தார். அது நியாயம்தான். அவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். நாம் எல்லாமே இப்படி பேச மாட்டோம். நாம் பொது இடத்தில் இப்படி பேசுவோமா?
இவரை பார்த்து மற்ற ஆட்கள் பேசுவார்கள். எளிமையாக மற்ற ஆட்கள் இஸ்லாமியர்களை விமர்சனம் செய்வார்கள். இவர் இப்படி பேசினால் இஸ்லாமியர்கள் எந்த நம்பிக்கையோடு இந்த நாட்டில் இருப்பார்கள். ஒரு தனி மனிதரே இப்படி பேச மாட்டார். ஆனால் நம் நாட்டில் பிரதமர் இப்படி பேசுகிறார். டி என் சேஷன் இருந்தால் இப்படி எல்லாம் நடக்காது. அவர் இருந்திருந்தால் இதை எல்லாம் அனுமதித்து இருக்கவே மாட்டார்.
தேர்தல் ஆணையம் அரசின் அங்கம் அல்ல.. அது அரசின் தனி அமைப்பு என்பார். டி என் சேஷன் இப்படிப்பட்ட பேச்சுக்களை அனுமதித்து இருக்க மாட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் கைது செய்யவே அனுமதித்து இருக்க மாட்டார். அவர் நினைத்து இருந்தால் அமலாக்கத்துறை இயக்குனர் கழுத்தை பிடித்து ஆஜராக சொல்லி இருப்பார்.
மோடி பேசியது வெறுப்பு கருத்துதான் என்பதை சர்வதேச ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்லாமியர்கள் பற்றி மோடி பேசியதை ஆய்வு செய்து உள்ளனர். அவர்களின் ஏஐ மூலம் மோடியின் பாடி லாங்குவேஜை வைத்து அவர் பேசியது வெறுப்பு கருத்துதான் என்று கண்டுபிடித்துள்ளனர்., என்று மூத்த பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications