Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் தலைமுறை பட்டதாரிகள்தான் டார்கெட்.. AI வைக்கும் பெரிய ஆப்பு! தமிழகத்தில் பெரும் பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலையின்மை பிரச்சனை பெரியதாக வெடித்து வருகிறது. இதனால் முதல் தலைமுறை பட்டதாரிகள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், இத்தனை ஆண்டுகள் சமூகநீதி இயக்கங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலையின்மை விகிதம் குறைந்திருக்கிறது. அப்படியெனில் எல்லோருக்கும் வேலை கிடைத்துவிட்டதா? கிடையாது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் வேலையின்மை விகிதத்தை குறைத்து காட்ட, புள்ளிவிவரங்களில் சில மாற்றங்களை செய்திருக்கின்றன. வேலை கிடைக்காமல் வெறுத்து போய் வேலை தேடுவதை கைவிட்டவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இதனால் வேலையின்மை குறைந்திருப்பதாக கணக்கு காட்டப்படுகிறது.

AI job jobs Tamil Nadu

வளர்ச்சியும் தொழிலாளர்களும்

இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். 2025-2026வது ஆண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் GDP 8.2% ஆக வளர்ச்சியடைந்திருக்கிறது. கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத வளர்ச்சி இது. உண்மைதான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்திருக்கிறது. ஆனால், அதில் தொழிலாளர்களின் பங்கு எவ்வளவு? இங்குதான் வேலையின்மைக்கான பிரச்சனை தொடங்குகிறது. உற்பத்தியில் தொழிலாளர்களின் பங்கு குறைந்துள்ளது. இதற்கு காரணம் தொழில்நுட்ப மயமாக்கல்.

தொழில்நுட்ப மயமாக்கல்

ஒரு நிறுவனம் 100 தொழிலாளர்களை வைத்து செய்ய வேண்டிய வேலையை 10 தொழிலாளர்களை கொண்டும், 1 அதிநவீன மெஷினை கொண்டும் செய்து முடித்து விடுகிறது. குறிப்பாக ஏஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏற்கெனவே வேலையிலிருந்த 90 பேர் அதிரடியாக நீக்கப்படுகிறார்கள். இங்குதான் முதல் தலைமுறையினர் பாதிக்கப்படுகிறார்கள். நவீன தொழில்நுட்பம் வராத வரை, அரசு கல்வி நிறுவனங்களில் படித்து வந்தவர்களும், கூடுதல் தொழில்நுட்ப அறிவுடன் தனியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்களும் ஒன்றாக வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

எதிரி யார்?

ஆனால் ஏஐ போன்ற தொழில்நுட்பம் நுழையும்போது அங்கு, ஏற்கெனவே தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள் வேலையை தக்க வைத்துக் கொள்கிறார்கள். முதல் தலைமுறை பட்டதாரியாக வந்தவர்கள், இந்த வேலையில் போட்டி போட முடியாமல் வெளியேறி விடுகிறார்கள். அவர்களால் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளும் அளவுக்கு பணம் இருக்காது, நேரமும் இருக்காது. அடுத்தடுத்து குடும்பம், குழந்தைகளுக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியே இவர்கள் கற்றுக்கொள்ள முயன்றாலும் கூட, அதுவரை பழைய நிறுவனத்தில் அவர்களுக்கு வேலை காத்துக்கொண்டிருக்காது.

முதலீடும் வேலைவாய்ப்பும்

அப்படியெனில் நவீன தொழில்நுட்பம் உழைப்பாளிகளுக்கு எதிரானதா? என்று கேட்டால் இல்லை. ஒரு ஏஐ மெஷின் வாங்கி 90 பேரின் இடத்தை நிரப்பிய நிறுவனங்கள், அதன் மூலம் வரும் லாபத்தை வேறு தொழிலில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, புதிய தொழிலுக்கு தேவையான ஆட்களாக வேலையை விட்டு நீக்கப்பட்ட 90 பேரும் இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் எந்த நிறுவனமும் இப்படி லாபத்தை வைத்து முதலீடுக்கு பெரிய அளவில் திட்டமிடுவதில்லை. தேசிய அளிவில் அனைத்து மாநிலங்களிலும் நிலைமை இதுதான்.

நவீன தொழில்நுட்பத்தின் வருகையை யாராலும் தடுக்க முடியாது. அது மனித குல வளர்ச்சியின் தவிர்க்க முடியாத அங்கம். அப்படியெனில் பிரச்சனைக்கு தீர்வு இல்லையா?

தீர்வு என்ன?

தீர்வு இருக்கிறது. அரசாங்கமும், நிறுவனங்களும் இணைந்து தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் குறித்து கற்பிக்க வேண்டும். தொழிலாளர்களின் திறனை மறு வடிவமைப்பு செய்ய வேண்டும். அதற்காக அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர்ந்தால் குடும்பத்திற்கு யார் சோறு போடுவார்கள்? எனவே, உதவித்தொகை, நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்.

வேலையிலிருந்து நீக்கப்படும் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நேற்று வரை 100 தொழிலளார்கள் வேலை செய்யும் நிறுவனங்கள், கடையை சாத்திவிட்டு கிளம்பினால் அரசிடம் சொல்ல தேவையில்லை என்று விதி இருந்தது. இன்று இந்த விதி 300 தொழிலாளர்கள் வரை உள்ள நிறுவனத்திற்கும் பொருந்தும் என்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் செய்தால் அது நாட்டின் வளர்ச்சியைதான் பாதிக்கும்.

தப்பிக்குமா தமிழ்நாடு

உருவாக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகள் மனித வளர்ச்சியை மையமாக கொண்டிருக்க வேண்டும். வெறும் உற்பத்தியை மட்டும் மையமாக கொண்டிருந்தால் அது வளர்ச்சியை ஏற்படுத்தாமல், வீக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும். இதையெல்லாம் சரி செய்தால்தான் முதல் தலைமுறை பட்டதாரிகள் வறுமை சுழற்சியை உடைத்து முன்னேறுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+