மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். அது போல் அதில் ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் இன்னொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு அதிமுக சார்பில் 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்து ஏ.சி.சண்முகம் கூறியிருப்பதாவது: எங்கள் கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதியும் , பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று என்று 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

puthiya needhi katchi

ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதாவது மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். பாஜக ஒதுக்கும் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். அந்த தொகுதி எது என்பது இனிதான் தெரியவரும்.

நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வெற்றி வாய்ப்புக்காக பாடுபடுவேன். மேலும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.

அதிமுக 167 தொகுதிகளிலும் பாஜக 27 தொகுதிகளிலும் பாமக 18 தொகுதிகளிலும் அமமுக 11 தொகுதிகளிலும் தமாகா 5 தொகுதிகளிலும் ஐஜேகே 2 தொகுதிகளிலும் புதிய நீதி கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+