முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென நன்றி சொன்ன அதிமுக கூட்டணி கட்சி தலைவர்.. என்னவாம்?
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைக்கு செவி சாய்த்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பூவை ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார்.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அளவுக்கு அதிமுக தலைமையுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார். இச்சூழலில் அவர், திமுக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்.சி எஸ்.டி. மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான குடும்ப வருமான உச்ச வரம்பை 8 லட்சமாக உயர்த்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்ததை வரவேற்கிறோம்.
பட்டியலின மாணவர்களுக்கான இந்த அத்தியாவசிய கோரிக்கை குறித்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் எடுத்துரைத்திருந்தேன். பட்டியலின மாணவர்களின் நலனுக்காக எடுத்துரைத்த எத்தனையோ கோரிக்கைகளில் குடும்ப வருமானம் இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மத்திய அரசு பட்டியலின மாணவர்களின் கல்விக்கான இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் பூவை ஜெகன்மூர்த்தியின் இந்த நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
புரட்சி பாரதம் கட்சி சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விழுப்புரத்தில் மனிதம் காப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்பட்டது. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி, பல முறை அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடர்வதை உறுதி செய்ததோடு, அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என 3 தொகுதிகளை விருப்பத் தொகுதிகளாக கேட்க உள்ளோம். சொந்த தொகுதியான திருவள்ளூரை அழுத்தமாக கேட்போம். அந்தத் தொகுதியை பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறி வந்தார்.
அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக இணைந்த புரட்சி பாரதம் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் பூவை ஜெகன்மூர்த்தி அதிர்ச்சியடைந்தார். "ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு கடைசியாக ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி பரிசீலனை செய்து முடிவை அறிவிப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் பூவை ஜெகன்மூர்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர். 2016 சட்டசபை தேர்தலில் கூடுதல் வாய்ப்பு கொடுக்கிறோம் எனக் கூறி அவரை கூல் செய்தனர். இதையடுத்து லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
-
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications