5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்க.. "திமுக பணம் தருகிறது.." தேர்தல் ஆணையத்தில் அதிமுக அதிரடி புகார்
கொளத்தூர், சேப்பாக்கம் உட்பட ஐந்து தொகுதிகளில் திமுக பணப் பட்டுவாடா செய்வதாகவும், எனவே, அங்கு, தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 420 கோடிக்கும் மேலே பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திமுக பணப் பட்டுவாடா செய்வதாக குற்றம் சாட்டி 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யுமாறு அதிமுக தரப்பு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 தொகுதிகள்
தமிழக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் இது தொடர்பாக புகார் கடிதம் அளித்துள்ளார். அதில், கொளத்தூர் , சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் அதிகமாக பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விஐபி தொகுதிகள்
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் நேரு, காட்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், திருவண்ணாமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் வேலு ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனவே இவை விஐபி தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.

ஜெயக்குமார் பேட்டி
புகாருக்கு பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, திமுகவினர் ஜனநாயகப் படுகொலை செய்வதில் கைதேர்ந்தவர்கள் . எனவேதான் திருமங்கலம் பார்முலா என்பதை கொண்டு வந்தனர். வாக்காளர்களுக்கு பணம் தரும் கலாச்சாரம் தமிழகத்தில் இல்லாமல் இருந்தது. முதல் முறையாக திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது. திருமங்கலம் பார்முலாப்படி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஒரு சில தலைவர்களை அந்தக் கட்சி வெற்றி பெற வைக்கிறது. அவர்கள் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் சரி, பெரும்பாலான தொகுதிகளில் அதிமுகதான் வெற்றி பெறுகிறது. அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதை தடுக்கும் வகையில் பணம் கொடுத்து வாக்குகளை பெறுகிறது திமுக.

கூகுள் பே பணம்
தமிழ்நாடு முழுவதும் திமுக ஜனநாயக படுகொலை செய்து பணநாயகம் என்பதை நிலைநிறுத்தி வருகிறது. பணம் மிக அதிகமாக விளையாடியிருக்கிறது. தேர்தல் ஆணையம் நியாயமாகவும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. கூகுள் பே மூலமாக பணம் சப்ளை செய்கிறது திமுக. இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடந்த தேர்தல்
தமிழகத்தில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் ஆளும் அதிமுக தரப்பு இதுபோன்ற ஒரு புகாரை வழங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த புகாரை தொடர்ந்து ஐந்து தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற பரபரப்பு பேச்சுக்கள் எழுந்துள்ளன. கடந்த சட்டசபை தேர்தலின்போது தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரு சட்டசபை தேர்தலை ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். பணம் ஆறாக ஓடியதை கட்டுப்படுத்த முடியாமல் போனதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications