இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக!
சென்னை: அதிமுக- பாஜக கூட்டணி ஏற்பட்ட நிலையில் என்னதான் தமிழகத்தில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என பாஜக சொன்னாலும் ஒவ்வொரு முறையும் கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேச எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு வரவழைக்கப்படுவது அதிமுகவின் உண்மையான விசுவாசிகளுக்கு வேதனையை தருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கூட்டணி பேச்சு நடத்த (வாஜ்பாய் காலத்தில்) போயஸ் கார்டன் இல்லத்திற்குத்தான் பாஜக நிர்வாகிகள் சென்று வந்தனர். அந்த கூட்டணியில் இருந்து அதிமுக திடீரென விலகியது. அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு ஒருமுறை அதிமுக- பாஜக கூட்டணி அமைந்து நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

அதன் பிறகு ஜெயலலிதா இருந்த வரை பாஜகவுடன் கூட்டணியே அமைக்கவில்லை. அவரது மறைவுக்கு பிறகுதான் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றார். அப்போது முதல் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையால் கடந்த 2023 ஆம் ஆண்டு அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்காமலேயே போட்டியிட்டு தோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் 11 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பாஜக தலைவர்கள் ஒவ்வொவரும் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி என பேசி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி என கூறி வந்தார்.
அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என்றாலும் என்டிஏ கூட்டணியில் தினகரனை கொண்டு வந்தது பாஜகதான் என்கிறார்கள். அது போல் எடப்பாடி பழனிசாமிக்கே பிடிக்காவிட்டாலும் தவெகவையும் என்டிஏ கூட்டணிக்கு கொண்டு வர பாஜக பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
அது போல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை என எது நடந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் டெல்லிக்கு செல்கிறார். அந்த வகையில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததும் எடப்பாடி பழனிசாமி 4 முறை டெல்லிக்கு பயணம் செய்துள்ளார்.
அவரது பயணங்கள் மற்றும் சந்திப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
1. முதல் பயணம் (ஏப்ரல் 2025): கூட்டணி அறிவிப்பு
கூட்டணி முறிவுக்குப் பிறகு நீண்ட இடைவெளி கழித்து, கடந்த ஏப்ரல் 11, 2025 அன்று டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து, 2026 தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) முறைப்படி உறுதி செய்தார். இந்தச் சந்திப்பில்தான் "தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி" என்பது இறுதி செய்யப்பட்டது.
2. இரண்டாம் பயணம் (ஜனவரி 2026): விரிவான ஆலோசனைகள்
இரண்டாவது முறையாக ஜனவரி 7, 2026 அன்று எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். இச்சந்திப்பின்போது பாமக உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளை இணைப்பது குறித்து அமித் ஷாவுடன் ஆலோசித்தார்.
ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்த பாஜகவின் கோரிக்கையை அவர் நிராகரித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
3. மூன்றாம் பயணம் (மார்ச் 2026): தொகுதிப் பங்கீடு இறுதி
சமீபத்தில், அதாவது மார்ச் 2, 2026 அன்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் டெல்லிக்குச் சென்றார்.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் குறித்து அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா ஆகியோருடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.
இந்தத் துரிதப் பயணத்தின் மூலமே, கூட்டணிக்குள் இருந்த இழுபறிகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4. நான்காவது பயணம் (இன்று)
4ஆவது முறையாக டெல்லிக்கு இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இன்றைய தினம் பாஜகவுக்கு எத்தனை சீட் என்பது குறித்து உறுதி செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக!












Click it and Unblock the Notifications