டிசம்பர் 3ம் தேதி கிளைமேக்ஸ்.. நாள் குறிச்சாச்சு.. அதிமுக - பாஜக மோதலுக்கு ஸ்வீட் முடிவு.. சுபம்தான்
சென்னை: அதிமுக - பாஜக மோதலில் டிசம்பர் 3ம் தேதிக்கு பின் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பாஜக மோதல் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில்.. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது. இந்த கூட்டணி முடிவிற்கு வந்துவிட்டது.
2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற முடிவை எடுத்து உள்ளோம். அதிமுக தனியாக கூட்டணி அமைக்கும். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாகும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம் பாஜக தலைவர்களோ.. நாங்கள் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியாது. டெல்லி மேலிடம்தான் முடிவு எடுக்க வேண்டும். எங்கள் கட்சியை வளர்ப்பதே எங்கள் நோக்கம். எங்கள் கட்சியை மாவட்ட அளவில் வளர்க்க பணிகளை செய்து வருகிறோம் . அதிமுக கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் இப்போதைக்கு கூட்டணிக்கு முடிவுரை எழுத முடியாது, என்று பாஜக வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாஜக மேலிடம் தலையிடவில்லை: இதில் பாஜக மேலிடம் இதுவரை தலையிடவில்லை. பாஜக மேலிடம் இப்போதைக்கு விஷயத்தை ஆற போடுங்கள். கூட்டணி பிரச்சனை இப்போது மேட்டர் இல்லை. 5 மாநில சட்டசபை தேர்தலில் நாங்கள் பிஸியாக இருக்கிறோம். அதை முடித்துவிட்டு அதிமுகவிடம் பேசுகிறோம். இப்போதைக்கு கட்சியை பலப்படுத்த பணிகளை செய்யுங்கள்.
( ரகசிய தூது.. டாப் சீக்ரெட் மீட்டிங்ஸ்.. வேலையை தொடங்கிய எடப்பாடி! திமுக அஸ்திவாரத்தை அசைத்த ஒரு கால்)
கட்சியை வலிமையாக்குவதற்கான வேலையை தொடங்குங்கள். கூட்டணி குறித்து நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் அதிமுக பற்றி இப்போதைக்கு தவறாக பேச வேண்டாம். கட்சி மேலிடம் கூட்டணியை பற்றி பார்த்துக்கொள்ளும். நீங்கள் கூட்டணி பற்றி முடிவு எடுக்க வேண்டாம். அதிமுக பற்றி தவறாக மேடைகளில் பேச வேண்டாம், என்று பாஜக மேலிடம் மாநில தலைவர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
கிளைமேக்ஸ்: 5 மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்க உள்ளது . இதற்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன,
அதில்,
- மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்கும்
- மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடக்கும்
- ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடக்கும்
- சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக தேர்தல் நடக்கும்)
- தெலங்கானா - நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடக்கும்
- 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 3ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று பிஎல் சந்தோஷ் தலைமையில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட அதிமுக கூட்டம் நடந்தது. அதில்.. இப்போதைக்கு கூட்டணி பற்றி பேச வேண்டாம். கட்சியை வலிமையாக்குவதே மாநில நிர்வாகத்தின் பணி. அதிமுகவை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கூறி உள்ளாராம்.
இன்னொரு பக்கம் டிசம்பர் 3ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இந்த மோதலில் முடிவு வரும். அதன்பின் டெல்லி தலைமை இதில் தலையிட்டு கூட்டணியை தொடர்வதா, முடிப்பதா என்று இந்த பிரச்சனைக்கு சுபமாக முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications