Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பாஜக "பிரஷர்" கூட்டணி அல்ல.. “பிளஷர்” கூட்டணி.. தமிழிசை சொன்னதை கேட்டீங்களா?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "Pressure கொடுத்து கூட்டணி வைத்ததாக சொல்கிறார் ஸ்டாலின். ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி பிரஷர் கூட்டணி அல்ல, Pleasure கூட்டணி" என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மிரட்டி பாஜக கூட்டணி வைத்துள்ளதாகவும், பாஜக தலைமையின் அழுத்தத்தால் அதிமுக பணிந்து போய் கூட்டணி வைத்துள்ளதாகவும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், அதிமுக - பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக இங்கு யாருடன் கூட்டு சேர்ந்து கொண்டு வந்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது என சவால் விட்டுள்ளார்.

AIADMK-BJP Alliance Is a Pleasure Not Pressure Tamilisai Soundararajan

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பாஜக, அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் செய்து அதிமுகவை அடக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் தனது தலைமை பதவிக்கே சிக்கல் வந்துவிடும் என்று பயப்படுகிறார்" எனக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

எந்த அழுத்தத்தில் நீங்க கூட்டணி வச்சீங்க?

இந்நிலையில், பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்ன அழுத்தத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

"காங்கிரஸ் கடந்த காலத்தில் திமுக ஆட்சியை கலைத்தது. அவசரநிலை காலத்தில் திமுக தலைவர்களை சிறையில் அடைத்தது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது. ராஜமன்னார் கமிட்டி அமைத்து மாநில சுயாட்சி பேசிய திமுக, இந்திரா காந்தியிடம் சரணடைந்தது. இப்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருப்பது எந்த அழுத்தத்தால்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பிரஷர் கூட்டணி அல்ல, ப்ளஷர் கூட்டணி

திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக - பாஜக கூட்டணி அழுத்தத்தில் இருப்பதாக கூறுவதை மறுத்த தமிழிசை சௌந்தரராஜன், "அதிமுக - பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து அண்ணன் ஸ்டாலின் மிகுந்த பிரஷரில் இருக்கிறார். அதனால், நாங்கள் Pressure கொடுத்து கூட்டணி அமைத்ததாக சொல்கிறார். நாங்கள் பிரஷர் கூட்டணி அல்ல Pleasure கூட்டணி" என்றார்.

பாராட்டு விழாவில் நனைகிறார்

மேலும் பேசிய தமிழிசை, "தற்காலிக செவிலியர்கள், கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், காவலர் பணிக்கு தேர்வு எழுதிய இளைஞர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், முதலமைச்சர் பாராட்டு விழாக்களில் நனைந்து கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்தார்.

திமுக அரசு, மக்களுக்காக செலவிட வேண்டிய பணத்தை விளம்பரங்களுக்கு செலவிடுவதாகவும், மக்களின் பிரச்சனைகளை புறக்கணிப்பதாகவும் தமிழிசை குற்றம்சாட்டினார். "மாநில சுயாட்சி நாயகன் என்று பாராட்டு பெறுவதற்கு என்ன சாதனை செய்தார்? திராவிட நாடு இல்லையென்றால் சுடுகாடு என்று பேசியவர்கள் இப்போது எந்த நிலையில் உள்ளனர்?" என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவை பாஜக மிரட்டிப் பணிய வைத்துள்ளது என்று ஸ்டாலின் கூறுகிறார். எங்களுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மகிழ்ச்சியோடு உருவானது எங்கள் கூட்டணி. எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயம் இல்லை" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+