அதிமுக + பாஜக கூட்டணி.. 2026 தேர்தல் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.

2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார். இந்த கூட்டணி காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கு சாதகம்.. யாருக்கு பாதகம் என்று இங்கே பார்க்கலாம்.

1. முதலில் பாஜக அதிமுக கூட்டணி அமைவதால் எத்தனை முனை போட்டி நிலவும் என்று பார்க்கலாம். இந்த கூட்டணி காரணமாக நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த கூட்டணிக்கு வராமல் போகலாம். ஏனென்றால்.. நாம் தமிழர் - பாஜக எதிர் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சி. விஜய் வேறு தலைமையிலான.. அதாவது எடப்பாடி தலைமையிலான கூட்டணிக்கு வர மாட்டார். இதனால் 4 முனை போட்டி.. அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி , தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும்.

AIADMK BJP NDA Alliance formed What will happen next Will DMK benefit from it in Tamil Nadu

2. இந்த 4 முனை போட்டி பொதுவாக ஆளும் கட்சிகளுக்கே சாதகம். அதாவது 4 முனை போட்டியால்.. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் 3 முனையாக பிரியும். அதாவது திமுகவிற்கு எதிராக செல்ல வேண்டிய வாக்குகள் 3 பக்கங்களில் பிரியும். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம். ஜெயலலிதா 2016ல் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரித்த மக்கள் நல கூட்டணி காரணமாக இப்படித்தான் வென்றார்.

3. பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவிற்கு செல்ல வேண்டிய.. இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்குகள் மொத்தமாக எதிர்பக்கம் செல்லும். திமுக, விஜய், சீமான் பக்கம் இந்த வாக்குகள் செல்லும். மொத்தமாக இந்த வாக்குகளை மீண்டும் அதிமுக இழக்கும். இந்த வாக்குகள் கடந்த லோக்சபா தேர்தல் கொஞ்சம் அதிமுக பக்கம் வந்தது. ஆனால் அதை அதிமுக மீண்டும் இழக்கும்.

4. அதே சமயம் நீட் தேர்வு, நாடாளுமன்ற இடம் குறைப்பு என பல விஷயங்களில் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்படும். இன்னொரு பக்கம் தொகுதி மறுவரையறையை செய்து நாடாளுமன்ற லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டின் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும். அப்படியே ஒருவேளை அதிகரித்தாலும்.. தமிழ்நாட்டை விட உத்தர பிரதேசம், பீகாரில் எம்பிக்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும். இது அதிமுகவிற்கு தமிழக மக்கள் இடையே எதிர்ப்பை வரவழைக்கும். இது தேர்தலிலும் எதிரொலிக்கும்.

5. இந்தியாவில் தற்போது மொழி பிரச்சனை உச்சத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இதில் அதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவும் அதிமுகவிற்கு தமிழக மக்கள் இடையே எதிர்ப்பை வரவழைக்கும். இது தேர்தலிலும் எதிரொலிக்கும்.

6. ஏனென்றால் இது அதிமுகவிற்கு பெரிய அடையாள பிரச்னையை கொடுக்கலாம். இந்தி திணிப்பை எதிர்த்துக்கொண்டே கூட்டணியில் நீடிக்க முடியாது. கூட்டணியை உருவாக்க முடியாது. நாடாளுமன்ற எம்பி சீட்டுகளை இழக்கவும் அதிமுக ஒப்புக்கொள்ள முடியாது. இது தமிழ்நாட்டில் அவர்களுக்கு எதிராக திரும்பும். இந்த சிக்கலை.. எடப்பாடி எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தேர்தலில் அந்த கட்சிக்கு பாதிப்பை தரும்.

Take a Poll

7. சாதகமான விஷயங்களும் நிறைய உள்ளன. நயினார் நாகேந்திரன் தலைவர் ஆகி உள்ளதால் அதிமுக தேவையான இடங்களை கூட்டணியில் பகிர முடியும்.

8. அதோடு அதிமுக இழந்த முக்குலத்தோர் வாக்குகள் பாஜக தலைவர் நயினார் வழியாக மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வரும். கவுண்டர் என்ற பிரிவினருக்கான கூட்டணி என்று இல்லாமல் இப்போது தெற்கிலும் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் வளர முடியும். அண்ணாமலை இருந்திருந்தால் இதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கும். தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி சதவிகிதம் பல தொகுதிகளில் குறைவுதான். பாஜக வாக்கு சதவிகிதம்தான் பல இடங்களில் திமுக வெற்றிக்கு காரணம். அதிமுக - பாஜக சேர்ந்து இருந்தால் திமுகவை பல தொகுதிகளில் வெல்ல விடாமல் தடுத்து இருக்கலாம், என்று இவர்கள் பேசி உள்ளனர். ஜாதி ரீதியிலான இரண்டு கட்சியிலும் கவுண்டர்கள் இருந்தால் அது கூட்டணிக்கு பலன் தராது. அதனால் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட ஜாதி பிரிவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் வந்தால் அது பாஜகவிற்கும் பலன், அதிமுக - பாஜக கூட்டணிக்கும் பலன் என்பதால் அவரை தலைவராக்க டெல்லி ஆலோசனை செய்கிறதாம். தென்மாவட்டங்களில் சரிவே பாஜக - அதிமுக கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள் ஆகும். அதோடு நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் நட்பாக செல்ல கூடியவர். பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முகமும் கவுண்டர் ஜாதியாக இருப்பதை பாஜக விரும்பவில்லை. எடப்பாடி அண்ணாமலை ஒரே ஜாதி. அதுவே பாஜகவிற்கு வேறு ஜாதியை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் அது கூட்டணிக்கு இன்னும் வலு சேர்க்கும். முக்கியமாக தென் மண்டலத்தில் கூட்டணிக்கு பலம் தரும். இதனால் நயினார் வருகை கூட்டணிக்கு பலம் சேர்க்கும்.

9. திமுக ஆட்சிக்கு எதிராக விமர்சனங்கள் உள்ளன. இப்போது அமித் ஷா பேச்சு மூலம் டெல்லி ஊழல் வழக்குகளை கையில் எடுக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இது திமுகவை பாதிக்கும் பட்சத்தில் டெல்லி ஆதரவரோடு இங்கே அதிமுக - பாஜக கூட்டணி அடித்து ஆடும் வாய்ப்புகள் உள்ளன. இது எடப்பாடிக்கு சாதகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

10. எடப்பாடி வலுவான கூட்டணியை அமைத்துவிட்டார் என்பதால்.. கட்சி உறுதியான இனி அவருடன் நிற்கும். இதன் காரணமாக அதிமுக மீண்டும் உட்கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்தாமல் தேர்தல் பணிகளை, தேர்தல் நடவடிக்கைகளை செய்ய தொடங்கும். இது எதிர்க்கட்சிகளுக்கு எழுச்சியாக இருக்கும் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+