கிணத்துல போட்ட கல்லு மாதிரி.. அரை இன்ச் கூட நகராத அதிமுக கூட்டணி! ஏக கடுப்பில் எடப்பாடி பழனிசாமி!
சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளதாகவும் அதிமுக தரப்பு 30 இடங்களை மட்டுமே கொடுக்க முடியும் எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல, தேமுதிகவும் அதிக இடங்களை எதிர்பார்ப்பதால், அடுத்த கட்டத்துக்கு கூட்டணியை நகர்த்த முடியாமல் அதிருப்தியில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் அதிமுகவினர்.
தமிழ்நாட்டில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இடையில் இருக்கிறது. ஆனால் அதற்குள்ளாகவே கூட்டணி உள்ளி அரசியல் வேலைகள் இப்போதிலிருந்தே ஆரம்பமாகிவிட்டன. குறிப்பாக அதிமுக-பாஜக கூட்டணியை சுற்றி பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அதிமுகவினர் சொல்லும் தகவல் படி, பாஜக தரப்பு வரவிருக்கும் தேர்தலில் 40 சட்டமன்ற தொகுதிகள் வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிமுக தரப்பு அதிகபட்சமாக 30 இடங்கள்தான் வழங்க முடியும் என என பேரத்தை முன் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக - பாஜக
இதேபோல் தேமுதிகவும் அதிக இடங்களை எதிர்பார்க்கிறதால், தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் உள்ளார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், திடீரென மீண்டும் கூட்டணியை உருவாக்குவதாக அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தது அரசியலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமி
அதுவரை கடுமையாக விமர்சித்திருந்த அதிமுக, உடனே பாஜகவுடன் சேர்ந்து செயல்படத் தொடங்கியது. ஆனால், இந்த கூட்டணியில் இன்னும் சில நிச்சயமின்மை இருக்கிறது என்ற உணர்வு அதிமுக தொண்டர்களிலும் சில தலைவர்களிலும் உள்ளது. இதற்கு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுகள் குறிப்பிடப்படுகின்றன. அவர் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை நேரடியாக ஒருமுறை கூட கூறவில்லை என்பதுதான் அதிமுகவினரின் கவலையாக உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல்
இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக கூட தமிழ்நாட்டில் அதிமுக தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி
அதே நேரத்தில், இந்த கூட்டணியின் முக்கிய இலக்கு திமுக ஆட்சியை அகற்றுவதே என்றும் அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. மேலும் இதே நோக்கத்துடன் இருக்கும் பிற கட்சிகளும் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கூட்டணியில் சேரும் கட்சிகள், அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் பொதுக்குழு தெளிவாக அறிவித்துள்ளது. அதோடு, கூட்டணியில் எந்தக் கட்சி சேர வேண்டும், யாருக்கு என்ன இடம் வழங்க வேண்டும் என்பதனை முழுமையாக எடப்பாடி பழனிசாமிதான் தீர்மானிப்பார் என்ற அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக அதிருப்தி
அதே நேரத்தில் அதிமுக பொதுக் குழுவுக்கு பின் எடப்பாடி நினைத்த எதுவுமே நடக்கவில்லை என்பதால் அவ்ரும், அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்தும், அவர்கள் தவெக தரப்புக்கு தாவத் திட்டமிட்டுள்ளனர். பாஜகவும் அதிக தொகுதிகள் கேட்கிறது, ஆறு சீட்டுகள் என்ற வார்த்தையை கேட்டு பிரேமலதா விஜயகாந்த் கடும் கோபத்தில் இருக்கிறார். இப்படி அதிமுக கூட்டணியை பலப்படுத்துவதற்காக தான் எடுத்த முயற்சிகள் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பதால் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications