No To Drugs என போட்டுவிட்டு! போதை கேசில் சிக்கிய அதிமுக நிர்வாகி! நடிகர் ஸ்ரீகாந்த் மாட்டியது எப்படி
சென்னை: சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் போதைப்பொருள் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து இவரிடம் சோதனை செய்யப்பட்டது. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர் மூலமாக இன்னும் சில நடிகர்கள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் இவர் வழக்கில் சிக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஏற்பட்ட சண்டையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். இவருடன் அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
😂😂😂😂 pic.twitter.com/fjeY6vj0PC
— Tej Parker (@rajamech1999) June 23, 2025
இதில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. தற்போது இந்த வழக்கில் கைதான அவரிடம் இருந்த போன் ஆதாரங்களின்படி அவர் போதை பொருள் விற்றதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் மீதான விசாரணை
முக்கியமாக பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்தன. அதாவது அவர் சென்னையில் போதை பொருள் டீலர் போல செயல்பட்டு வந்துள்ளார். அவர் யாரிடம் போதைப்பொருளை வாங்கினார், யாருக்கு விநியோகம் செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவரையும் விசாரித்தனர். அப்போது, பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதை பிரசாத் ஒப்புக்கொண்டார். கிட்டத்தட்ட இவர்கள் கொக்கைன் டீலர்களாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி
இவரிடம் பல நடிகர்கள், நடிகைகள் போதைப்பொருள் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த், கிளப் மற்றும் பார்களில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் அதிமுக நிர்வாகி இவரிடம் போதை பொருட்களை விற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு இவர் விற்றதாக கூறப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் இருந்து 40 முறை போதைப்பொருளை பயன்படுத்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் ஸ்ரீகாந்த் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி பிரசாத், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் Say No To Drugs என்று திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும் என்று போட்டுவிட்டு அதிமுக நிர்வாகியே போதை பொருள் வழக்கில் சிக்கி இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
உறுதி செய்யப்பட்டது
சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் போதைப்பொருள் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து இவரிடம் சோதனை செய்யப்பட்டது. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications