ஒன்னு சேருங்க.. இல்லைனா கிளம்புங்க! கிளைக் கழகத்திலிருந்து தொடங்கிய கலவரம்! எடப்பாடி எகிறும் பிரஷர்!
சென்னை: ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் எதிராக திரும்பியுள்ள நிலையில், திண்டிவனம் அதிமுக தொண்டர்களும் தற்போது அவருக்கு போர்க்கொடி தூக்கியுள்ளனர். கழகத்தை ஒன்றிணையுங்கள் அல்லது பதவி விலகுங்கள் எனப் திண்டிவனத்தில் இருந்து அதிமுகவினர் பரபரப்பு முழக்கத்தை தொடங்கியுள்ளனர். இதனால் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
அஇஅதிமுக-வின் தற்போதைய தலைமை மற்றும் நிர்வாக முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களே பகிரங்கமாகப் போர்க்கொடி உயர்த்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகர ஐந்தாவது வார்டு கிளைக் கழகத்தைச் சேர்ந்த அதிமுக கிளை கழகச் செயலாளர், அவைத்தலைவர் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய தொண்டர்கள், ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர்.
அதிமுக பிளவு
அதனை தொடர்ந்து திண்டிவனம் நகர ஐந்தாவது வார்டு கிளைக் கழக செயலாளர் ஐயப்பன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டாக செய்தியார்களை சந்தித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஐந்து அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
கட்சி விதிகளுக்குப் புறம்பாகப் பதவி வழங்கப்படுவது குறித்ததாகும். "கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை, விதிகளின்படி ஆறு ஆண்டுகள் கழியும் முன்பே மீண்டும் சேர்த்து, அவருக்கு மாவட்டப் பொறுப்பு வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? அவருக்குக் கீழே எங்களை வேலை செய்யச் சொல்வது மிகுந்த வருத்தமளிக்கிறது" என்கின்றனர்.
திண்டிவனம் அதிமுக
மேலும், தொடர் தோல்லி குறித்துப் பேசிய அவர்கள், "எம்.எல்.ஏ மற்றும் எம்.பி தேர்தல்களில் சிலரைத் தேடிப்பிடித்து நிறுத்திவிடலாம். ஆனால்,உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க ஒரு லட்சத்து எழுபதாயிரம் பிரதிநிதிகள் தேவைப்படும் உள்ளாட்சித் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் சந்திக்க நாங்கள் தயாராக இல்லை. மக்கள் மத்தியில் இவருடைய பெயரில் ஓட்டு கேட்கவே எங்களுக்குப் பயமாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளனர்.
மிகப்பெரிய துரோகம்
மேலும், பொதுக்குழுவைக் கூட்டி தோல்விகளுக்கான விளக்கத்தை இதுவரை தலைமை அளிக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். முதலமைச்சர் பதவியின் மீதான ஆசைக்காகத் திமுக-வுடன் கூட்டணி வைக்க முயற்சி நடப்பதாகக் குறிப்பிட்ட தொண்டர்கள், "27 ஆண்டுகளாகத் திமுக-வை எதிர்த்து அரசியல் செய்த தங்களால் இதை ஏற்க முடியாது. சொந்த பந்தங்களைக் கூட பகைத்துக் கொண்டு கட்சிப் பணியாற்றிய எங்களுக்கு, இது மிகப்பெரிய துரோகம்" என ஆதங்கப்பட்டனர்.
எடப்பாடிக்கு நெருக்கடி
"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா வளர்த்த இந்தக் கட்சியை அழிக்காதீர்கள். ஒன்று பிரிந்து சென்றவர்களைச் சேர்த்து கழகத்தை ஒன்றிணையுங்கள்; இல்லையென்றால் கண்ணியமான முறையில் பதவியை விட்டு விலகுங்கள். இந்தக் கட்சியை வழிநடத்தத் தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள்" தெரிவித்துள்ளனர். கட்சியின் கிளை மட்டத்திலிருந்து எழுந்துள்ள இந்த எதிர்ப்புக் குரல், அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications