திடீர் சந்தோஷம்.. அதிமுக கேம்பில் பொங்கும் உற்சாகம்.. இபிஎஸ்ஸும் செம ஹாப்பி.. அப்படி என்ன நடந்தது?
சென்னை: உற்சாகம் கரைபுரண்டு ஓட தொண்டர்கள் வேலையை ஆரம்பித்துவிட்டனர்.. களத்தில் மாவட்ட செயலாளர்களும் தீவிரமாக இயங்கிவருகிறார்கள்.. சந்தோசமான மூடில் இருக்கிறதாம் அதிமுகவின் மொத்த கேம்பும்.. அப்படி என்ன நடந்தது? அதிமுகவின் உற்சாகத்திற்கு பின் 4 விஷயங்கள்தான் காரணம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
தமிழக அரசியலில் எப்போது என்ன டிவிஸ்ட் நடக்கும் என்று தெரியாது.. யார் எந்த பக்கம் போவார்.. யார் அரசியலை விட்டே போவார் என்றெல்லாம் கணிப்பது ரொம்ப கஷ்டம். ரஜினிகாந்த் விலகல், சசிகலா விலகல், சரத்குமாரின் திடீர் கமல் பாசம், கருணாஸின் இங்கி பிங்கி பாங்கி என்று யார் எப்போது என்ன செய்வார்கள் என்றே கணிக்க முடியாது.
அப்படி இருக்கும் போதுதான் அதிமுகவின் கூட்டணியில் இருந்து நேற்று விலகுவதாக தேமுதிக அறிவித்தது. நேற்று அதிமுகவின் கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில்.. அதிமுக தரப்பு அதிக உற்சாகம் அடைந்துள்ளது.

உற்சாகம்
தேமுதிக கூட்டணியில் இருந்தால் பலம் தானே அவர்களின் விலகலை நினைத்து ஏன் உற்சாகம் அடைய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதிமுகவின் உற்சாகத்திற்கு பின் அது மட்டும் காரணம் இல்லை. அடுத்தடுத்து நடந்த 4 விஷயங்கள்தான் அதிமுகவின் சந்தோசத்திற்கு காரணம். முதல் விஷயம்.. தேமுதிகவின் விலகலால் அதிமுக கூட்டணியில் 13 இடங்கள் கூடுதலாக உள்ளது.

பிரிக்கலாம்
இதில் அதிக இடங்களை அல்லது மொத்தமாக 13 இடங்களையும் கூட அதிமுக எடுத்துக்கொள்ளும். இதனால் தேமுதிக போட்டியிட வேண்டிய தொகுதியில் இருக்கும் அதிமுக புள்ளிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். தேமுதிகவால் லோக்சபா தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத புள்ளிகளுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும். அதோடு திமுகவிற்கு இணையாக 170+ தொகுதிகளில் களமிறங்க இதன் மூலம் அதிமுகவிற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வாய்ப்பு
இதனால் திமுகவிற்கு இணையாக அவர்களை எதிர்க்க முடியும். தனி மெஜாரிட்டி பெறவும் வாய்ப்பு அமையும். இதுதான் அதிமுகவின் சந்தோசத்திற்கு முதல் காரணம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் தேமுதிக விலகலால் பாமக தரப்பு டென்சன் இல்லாமல் வேலை பார்க்கும். வடக்கு மாவட்டங்களில் கோஷ்டி மோதல் காரணமாக கடந்த லோக்சபா தேர்தலில் வேலைகள் சரியாக நடக்கவில்லை. தற்போது தேமுதிக இல்லை.

கோஷ்டி மோதல்
தேமுதிக - பாமக ஒரே இடத்தில் இருந்தால் மோதல்தான். இதனால் இந்தமுறை எந்த தகராறும் இல்லாமல் பாமக தொண்டர்கள் களத்தில் பணியாற்ற முடியும். இதுதான் அதிமுக தரப்பை உற்சாகப்படுத்தி உள்ளது. பாமகவின் வெற்றியை அதிமுக இந்த தேர்தலில் அதிகம் நம்பி இருக்கிறது. இதெல்லாம் போக மூன்றாவதாக தேமுதிக இருந்தால் அவர்கள் போட்டியிடும் தொகுதி எல்லாம் மதில் மேல் பூனை கதைதான். அதோடு அவர்களுக்கு வாக்கு வங்கியும் 3%க்கும் கம்மியாகவே உள்ளது.

13 இடங்கள்
13 இடங்கள் கொடுத்தால் கூட அதில் எதிலும் தேமுதிக வெற்றிபெற்றுவிடும் என்று அடித்து கூறிவிட முடியாது. அப்படி இருக்கும் போது தேமுதிகவை வைத்து ஏன் ரிஸ்க் எடுக்க வேண்டும். அவர்களை அனுப்பியது கூட ஒரு வகையில் சந்தோசம்தான் என்று அதிமுக நிர்வாகிகள் நினைக்கிறார்கள். தேமுதிக சென்றதால் பெரிய இழப்பு இல்லை என்று அதிமுக நினைக்கிறது.

சந்தோசம்
இதெல்லாம் போக வன்னியர் உள் இடஒதுக்கீடு, குடும்ப தலைவிகளுக்கு ரூ1500 / மாதம், 6 இலவச சிலிண்டர் என்று அதிமுக அறிவித்ததும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தேர்தல் நேரத்தில் பெரிய பாசிட்டிவ் விஷயமாக வந்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டெஸ்க்கிற்கு சென்றுள்ளதாம்.. இதுவும் கூட அவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications