சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ்-க்கு அனுப்பப்பட்ட வேட்பாளர் படிவம்.. மாலைக்குள் பதிலளிக்க உத்தரவு.. உற்றுநோக்கும் அதிமுக!

அதிமுக வேட்பாளர் தேர்வு படிவம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான படிவம், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணிக்கு வேட்பாளர் குறித்து பதில் அளிக்கவும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உத்தரவிட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நேரில் வரக்கூட மனசு இல்லை! செதில் செதிலாக உடைந்த ஓபிஎஸ் டீம்.. காலியான கூடாரம்! சிரிக்கும் எடப்பாடி? நேரில் வரக்கூட மனசு இல்லை! செதில் செதிலாக உடைந்த ஓபிஎஸ் டீம்.. காலியான கூடாரம்! சிரிக்கும் எடப்பாடி?

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் தரப்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

வேட்பாளர் படிவம்

வேட்பாளர் படிவம்

இதையடுத்து நேற்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை அனுப்பி வைப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்மகன் உசேன் உத்தரவு

தமிழ்மகன் உசேன் உத்தரவு

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இரட்டை இலை சின்னம் தொடர்பான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட்டு நாளை மாலைக்குள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஓபிஎஸ் தரப்புக்கு அனுப்பி வைப்பு

ஓபிஎஸ் தரப்புக்கு அனுப்பி வைப்பு

இந்தப் படிவம் நேற்று வரை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான படிவத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பி வைத்தார். தொடர்ந்து, மாலை 7 மணிக்குள் அதிமுக வேட்பாளர் குறித்து பதில் அளிக்க தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அதிமுக வேட்பாளராக தென்னரசு தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Form for selection of candidate to contest in Erode East by-election has been sent to the OPS and his support general committee members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X