அண்ணாமலை லேகியம் விற்கிறார்.. அவர் அப்பன் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது- அதிமுக உதயகுமார் ஆவேசம்
சென்னை: வாங்கய்யா... வாங்கய்யா.. உடனே வாங்கய்யா இல்லைன்னா லேகியம் தீர்ந்து போயிடும் ஐயா என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை லேகியம் விற்பது போல பேசுகிறார் என்று திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். அதிமுகவை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்றும் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின்னர் இரண்டு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். லோக்சபா தேர்தல் நெருங்குவதால் அதிமுக, பாஜக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்று இதுவரை முடிவாகவில்லை. கூட்டணி கதவு திறந்துதான் இருக்கிறது என்று அமித்ஷா சொன்ன அதே நேரத்தில் அதை நான் பார்க்கவில்லை என்று பதில் சொன்னார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுகவை நாங்கள் அழைக்கவில்லை என்று சொன்ன அண்ணாமலை, கடைசி நேரத்தில்தான் யாரெல்லாம் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தெரியவரும் என்று பேட்டி அளித்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரிடம் அதிமுக பாஜக கூட்டணி பிரிவிற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சரமாரியாக அண்ணாமலையை சாடி பேசினார் ஆர்.பி.உதயகுமார்.
அண்ணாவைப்பற்றி பேசியது.. அம்மாவைப் பற்றி பேசியது.. தன்மானத்தை இழந்து விட்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக பயணம் செய்கிறோம். அதனுடைய வெளிப்பாடுதான் இது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வருவதற்குக் காரணமே அண்ணாவைப்பற்றியும், அம்மாவைப்பற்றியும் பேசியதுதான்.
அதிமுக என்ற இயக்கத்தைப்பற்றி அவருக்கு தெரியவில்லை. இன்னமும் ஒரு கவுன்சிலராகக் கூட ஜெயிக்கவில்லை. இதுவரை எந்த அனுபவமும் இல்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்றால்தானே பக்குவம் வரும். இன்னமும் அவருக்கும் பக்குவமே வரவில்லை. அவர் என்ன சொல்கிறார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு புரியவில்லை.
அண்ணாமலை மட்டுமல்ல அவரது அப்பன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. எந்த கொம்பானாலும் அதிமுகவை அழிக்க முடியாது. இதை 2 கோடி தொண்டர்களின் சார்பாக எச்சரிக்கையாக சொல்கிறேன். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இல்லை என்றால் தமிழ்நாட்டில் அரசியலே இல்லை. அதிமுக இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஏழை, எளிய, சாமானிய மக்களின் எதிர்காலமே இல்லை. பட்டியலின அனைத்து இன மக்களுக்கும் அதிமுகதான் அடையாளம்.. உயிர்.
இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று யார் வந்தாலும் தொட்டுப்பார்க்க முடியாது. சாமானிய தொண்டனாக நான் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த வித தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம். சும்மா பூச்சாண்டி காட்டுவது ஐயா என்று சொல்வது.. எல்லாம் இங்கே வேண்டாம்.
யார் நீ எங்க இருந்த? எங்க வந்த? எங்க போன? உன்னுடைய வரலாறு என்ன? என்னமோ நீதான் இந்த நாட்டையே காப்பாற்ற வந்தது போல பேசுகிறார். கொஞ்சம் பாத்து நிதானமாக பேசு தம்பி.. நாங்க எல்லாம் பேச ஆரம்பிச்சா வேஷ்டிய கழற்றிட்டு ஓடிறனும். நாங்க எல்லாம் கட்சிக்கு கட்டுப்பட்டு எங்க பொதுச்செயலாளருக்கு கட்டுப்பட்டு பேசாமல் இருக்கிறோம்.
இந்த லேகியம் சாப்பிடுங்கய்யா.. காய்ச்சல் சரியாகும் இந்த லேகியம் உங்களுக்காக தயாரிக்கப்பட்டது. வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் உங்களுக்கு கிடைக்காதுய்யா.. ஐயா நீங்க யாரையும் நம்பாதீங்க. செத்தா பார்க்காதீங்க.. உயிரோடு இருந்தா வந்து பாருங்க என்று சொல்கிறார் அண்ணாமலை. அவர் ஒண்ணுமே இல்லை வெறும் பூஜ்ஜியம். இப்படி எல்லாம் சொன்னால் என்னை அவர் திட்டுவார் பரவாயில்லை.
50 பேரை சம்பளத்திற்கு வைத்துக்கொண்டு சமூக வலைத்தளத்தில் எழுதிவிட்டால் நீ தலைவராகி விடமுடியுமா? நான் சாமானிய தொண்டன், அதிமுகவில் எம்ஜிஆர்.. அம்மா, எடப்பாடியால் செல்வாக்கினால் 3 முறை ஜெயித்து அமைச்சராகியிருக்கிறேன்.
அதிமுகவை அழிக்க அண்ணாமலை மட்டுமல்ல அவரது அப்பனே வந்தாலும் முடியாது. நீ என்ன ஒரு கவுன்சிலராக கூட ஜெயிக்கலை. அதுக்குள்ளே பிரதமர் ஆக வேண்டும் என்று நினைக்கிறாய். மோடி எதற்கும் அண்ணாமலையிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று கடைசியில் பஞ்ச் வைத்து முடித்தார் ஆர்.பி உதயகுமார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications