பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக அவ்வளவுதான்.. மோகன் குமாரமங்கலம் பிரத்யேக பேட்டி
சென்னை: பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை பொதுமக்கள் யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தெரிவித்தார்.
Recommended Video
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்களை இப்போது பார்ப்போம்.
ஸ்டெர்லைட் தீர்ப்பு வந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தை வரவேற்கிறேன். இப்போது கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல தாக்க மதிப்பீட்டை பார்த்தால், தொழில் தொடங்கும் முன் அனுமதி வாங்க தேவையில்லை. ஆரம்பித்த பின் வாங்கினால் போது என்று வைத்துள்ளார்கள். இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. உயிரிழந்த 13 பேருக்கு கிடைத்த முதற்கட்ட நீதி இது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் செல்லும் போது தான் பயமாக உள்ளது. ஏனெனில் இதுவரை எல்லாமே உச்ச நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு சாதமாக நடக்கிறது என்றார்.

எங்கிருந்து பணம் வரும்
கேள்வி: பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்வோருக்கு இன்னோவா கார் வழங்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறியிருக்கிறாரே அது பற்றி உங்கள் கருத்து என்ன?
எங்கிருந்து பணம் கொண்டு வந்து இன்னோவா கார் வாங்க போகிறார் என்பது தான் இப்போது முதல் கேள்வி. ஏனெனில் பிஎம் கேர் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளார். அதை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்கள். பிஎம்கேர் பணத்தில் இருந்தா வாங்கி தரப்போகிறீர்கள். எப்படி பணம் வரும் என்பதை கூறுங்கள். பாஜக அலுவலகத்திற்கு இடம் வாங்கி உள்ளார்கள். அந்த பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பதையும் நான் கேட்க விரும்புகிறேன். மற்ற கட்சியில் உள்ள கொள்கை இல்லாத, கோட்பாடு இல்லாத தலைவர்களை பாஜகவிற்குள் கொண்டுவர வைப்பதற்காக இந்த வாதத்தை அவர்கள் வைக்கிறார்கள் என என்னால் சொல்ல முடியும் என்றார்.

பாஜகவுடன் கூட்டணி
தொடர்ந்து கூட்டணி குறித்து பேசிய மோகன் குமாரமங்கலம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.இதை பொதுமக்கள் யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் என்றார்.

சச்சின் பைலட்
கேள்வி: காங்கிரஸ் கட்சியில் சீனியர் ஜூனியர் மோதல் அதிகமாக உள்ளதே.. அண்மையில் சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் என மோதல் ஏற்பட்டுள்ளது. சீனியருக்கு அதிக மதிப்பு உள்ளதாக கூறப்படுகிறதே ஏன்?
பதில்: ஜோதிராதித்யா சிந்தியா, 50 வயதை தொட்டவர் எனவே அவரை ஜூனியர் என்று சொல்வதை ஏற்க முடியாது. எனக்கும் சச்சின் பைலட்டுக்கும் ஒரே வயசு 42. இதை மிடில் ஏஜ் என்றுதான் சொல்ல முடியும். சச்சின் பைலட் 26வயதில் மத்திய அமைச்சரானார். ராஜஸ்தான் மாநிலத்தில் எதிர்க்கட்சியாக வந்த போது மாநில தலைவர் என்ற அந்தஸ்து கொடுத்தார்கள். அவர் கோபித்துக் கொண்டு சென்றார். பின்னர் வந்துவிட்டார. ஆனால் ஜோதிராதித்யா சிந்தியா அவரது எம்எல்ஏக்களை கூப்பிட்டுக்கொண்டு சென்று பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் சேரும் போது அவர் என்ன சொன்னார் என்றால், எனக்கு காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை . நான் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் போகலாம் . எனக்கு ஆட்சி தான் முக்கியம் என்றார்.

ராமர் கோயில்
கேள்வி: பிரியங்கா காந்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முக்கியமான நாள் என்று சொல்லியிருக்கிறார். எனவே பாஜகவில் கொள்கையை காங்கிரஸ் பின்பற்றுகிறதா?
பாபர் மசூதியை இடித்தது யார்? இஸ்லாமியர்களை யார் தாக்கி பேசுவது. பிரியங்கா காந்தியின் பேச்சை தீவிரமாக பார்க்க வேண்டும். ராமர் கோயிலை அனைவரும் சேர்ந்து நடத்தும் ஒற்றுமை நிகழ்வாக நடத்த வேண்டும் என்றுதான் கேட்டார். ஆனால் அப்படி நடத்தப்படவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை கூட கூப்பிடவில்லை. நீண்ட நாள் பிரச்சனை இருந்ததால் பிரியங்கா காந்தி அனைவரையும் ஒன்றுபடுத்தி நடத்த வேண்டும் என்றார்.

ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும்
ரஜினி, கமல் கட்சிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரஜினி இன்னும் கட்சியை ஆரம்பிக்கவில்லை. ரஜினி ஒரு நல்ல நடிகர் சூப்பர் ஸ்டார். அவர் அரசியலுக்கு வந்த பின் அவரை பற்றி பேசலாம். கமல்ஹாசன் கொள்கை பற்றி இதுவரை தெளிவாக சொல்லவில்லை. அவர் வெளிப்படுத்திய பிறகு பேசலாம் என்றார். சீன விவாகரம் உள்பட பல்வேறு விவகாரம் குறித்து ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் பேசியுள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications