போட்றா வெடிய.. ஸ்வீட்டை வாயில் திணித்து.. முனுசாமி வேலுமணி முன்னிலையிலேயே அதிர வைத்த அதிமுகவினர்
சென்னை: பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்த உடன், அதிமுகவினர் உற்சாகமாக பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள். கேபி முனுசாமி தலைமையில் அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துக் கொண்டிந்த போதே, அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடிக்ககப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாஜக உடன் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிவிப்பில், " தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பாஜகவின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு அதிமுக மீதும், எங்களுடைய கட்சியின் தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைமை கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிமுக வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழகத்தின் எம்ஜிஆர் மாளிகையில் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல் பாஜகவிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்ற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று அதிமுகவின் சென்னை பகுதி தலைவர்களும், வட மாவட்ட தலைவர்களும், தென்மாவட்ட தலைவர்களும் மறைமுகமாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில் 2019 தேர்தல் போல் ஆகிவிடக்கூடாது என்று கவனமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட முடிவு செய்தார்.அப்படி கழட்டிவிட முடிவு செய்ததற்கு அண்ணாமலையின் பேச்சு மட்டும் காரணம் இல்லையாம்.

இரட்டை இலக்கத்தில் சீட் கேட்டது, ஓபிஎஸ், டிடிவி தரப்பை கூட்டணியில் சேர்க்க வலியுறுத்தும் என்ற அச்சம் போன்ற காரணங்கள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. இதுதவிர பாஜக கூட்டணியில் இருந்தால் 2024 மற்றும் 2026 தேர்தலிகளில் அதிமுக வெற்றி பெற முடியாது என்று நினைக்கிறதாம். அத்தோடு தொண்டர்கள் பலரும் பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்று நிர்வாகிகள் எடுத்துரைத்தனராம். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து விலகுது என அதிரடியாக அறிவித்துள்ளாராம்,.
பாஜக உடன் கூட்டணி இல்லை என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்த உடன், அதிமுகவினர் உற்சாகமாக பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகிறார்கள். கேபி முனுசாமி தலைமையில் அதிமுகவினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துக் கொண்டிந்த போதே, பட்டாசுகள் அதிமுக தலைமை அலுவகத்தில் வெடிக்ககப்பட்டன.
தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். அங்கிருந்த அதிமுக தொண்டர்கள், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்டது மகிழ்ச்சியாக உள்ளதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர். சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக உடன் கூட்டணி முறிந்ததை அதிமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
-
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம்












Click it and Unblock the Notifications