விவசாயி தற்கொலை! உடனே நிறுத்தனும்.. முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் ஓபிஸ்.. மீண்டும் கெயில்?
சென்னை : விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவதுடன், உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி ஒன்றியம் பாலவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக கெயில் நிறுவன அதிகாரிகள் எரிவாயு குழாய் அமையவுள்ள நிலங்களில் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன் தினம் பாலவாடி பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் தனது விளைநிலத்துக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓபிஎஸ் அறிக்கை
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை நிறுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக, கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியினை கெயில் நிறுவனம் மேற்கொள்ள முயற்சித்த போது, அது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் 2013ம் ஆண்டு அம்மா ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டது.

கெயில் எரிவாயு குழாய்
அந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு குழாய்கள் அமைத்தால் விவசாயிகளின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் நிலங்களின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடையும் என்றும், எரிவாயுக் கசிவு ஏற்படும் என்றும், விவசாயப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்பதிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் நிலஉரிமையாளர்கள் தெரிவித்தனர். மேற்படி கருத்துக்களின் அடிப்படையில், விவசாய நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை பதிக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டுமென்றும், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரமாகபதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டு அந்த முடிவு சென்னை உயர் நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது.

மன வேதனை
இந்தவழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்று, அங்கு கெயில் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும், இந்தத் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கெயில் நிறுவனத்தினர் மூன்று நாட்களாக எரிவாயு குழாய் அமைக்க நில அளவீடு செய்து வருவதாகவும், இதனைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் தன்னுடைய நிலம் பறிபோகப் போகிறது என்ற பயத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்தி மன வேதனையை அளிக்கிறது.

முதல்வருக்கு கோரிக்கை
வேளாண் துறை சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஆய்ந்து உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், விவசாயநலத் திட்டங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, இன்று வேளாண் தொழிலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எரிவாயு குழாய்களை அமைக்கும் பணியை வேடிக்கைப் பார்ப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே, முதல்-அமைச்சர் இது குறித்து உடனடியாக கெயில் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, எரிவாயு குழாய்களை நெடுஞ்சாலைகள் ஓரமாக அமைக்க வலியுறுத்தவும், உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications