Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’நுணலும் தன் வாயால் கெடும்’ திமுக இரட்டை வேடத்தை ஒப்பு கொண்டார்! தங்கம் தென்னரசுவுக்கு ஓபிஎஸ் பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நன்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்துக்களை மொழிபெயர்த்து இந்தி மொழியில் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்," ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டைவேடம் போடுகிறது திமுக என கடுமையாக விமர்சித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு


இதற்கு பதிலளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு." ஓ.பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவில் முன்னிலைப்படுத்திப் பிரபலப்படுத்திக் கொள்ள எடுக்கும் பகீரதப் பிரயத்தனங்கள் குறித்து தங்களுக்குக் கவலை ஏதும் இல்லை எனவும், சொத்தை வாதம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு, அதன் பேரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் குளிர் காய முற்பட்டு இருக்கின்றார்." எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பதில்

ஓ.பன்னீர்செல்வம் பதில்

இந்நிலையில்" நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்," இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது, தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் முதல்-அமைச்சர் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதற்கு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பதில் அளித்து இருக்கிறார். அவருடைய பதில் அறிக்கையை பார்க்கும்போது, இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

எடப்பாடி பழனிசாமி மவுனம்?

எடப்பாடி பழனிசாமி மவுனம்?

இந்தி மொழி குறித்த மத்திய உள்துறை அமைச்சரின் கருத்திற்கு தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைபாட்டினை உறுதிபட முதல்-அமைச்சர் தெரிவித்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலைப்பாடு ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும். இந்தி மொழி குறித்த உள்துறை அமைச்சரின் கருத்து குறித்து 'ஒன்றுமே தெரியாது' என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும், அதனை நான் கண்டித்து இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறி இருக்கிறார்.மத்திய உள்துறை அமைச்சர் இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்து முதலில் அவருக்கு தெரியாததால் 'ஒன்றுமே தெரியாது' என்று கூறினார்.

அதிமுக நிலைப்பாடு

அதிமுக நிலைப்பாடு

பின்னர், அதற்கு மறுநாளே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் அறிக்கை வெளியிட்டு விட்டதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. காரணம், பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அ.தி.மு.க. நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது. எனவே, ஒரேநிலைப்பாடு தான். தமிழுக்காக தி.மு.க. அரசு செய்த சாதனைகளை அமைச்சர் பட்டியலிட்டு இருக்கிறார். இதுபோன்ற சாதனைகள் எல்லா ஆட்சிக் காலத்திலும் நடைபெறுகின்ற இயல்பான ஒன்று தான்.

நகைப்புக்குரியதாக உள்ளது

நகைப்புக்குரியதாக உள்ளது

தமிழ் வளர்ச்சித் துறை இலாக்காவை தன் வசம் வைத்துக் கொண்டு இவற்றைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல், அம்மா பாசறையில் பாடம் பயின்ற என்னை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி வகித்த என்னை, தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை பத்தாண்டுகள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பித்த என்னைப் பார்த்து முன்னதாகவே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் நான் அறிக்கைவிடுத்தேன் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

 தமிழ் வளர்ச்சிக்கானது

தமிழ் வளர்ச்சிக்கானது

கடைசியாக, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து ஏனைய நூல்கள் இந்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார் அமைச்சர். தமிழ் இலக்கிய நூல்களை இந்தி மொழியிலோ அல்லது பிற மொழிகளிலோ மொழி பெயர்ப்பதன் மூலம் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த மொழியாம் தமிழ் மொழியைபடிக்க வேண்டும் என்றஆர்வம் பிற மொழிகளைப் பேசுபவர்கள் மத்தியில் எழும். இது தமிழ் வளர்ச்சிக்கானது.

நுணலும் தன் வாயால் கெடும்

நுணலும் தன் வாயால் கெடும்

அதேசமயத்தில், முதல்-அமைச்சர் விதி 110-ன் கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் படிக்கப்பட்ட அறிவிப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து அதனை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடுவதன்மூலம் தமிழ் மொழிகற்கும் ஆர்வம் பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்படாது. இது தன்னலத்திற்கானது. எது எப்படியோ, 'நுணலும் தன் வாயால் கெடும்' என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி வி‌ஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை மறை முகமாக ஒத்துக் கொண்ட அமைச்சர் அவர்களுக்கு நன்றி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+