தபால் வாக்குகளை மே 2இல்தான் எண்ண வேண்டும்.. அதற்கு முன்பாக வாக்குபெட்டியை திறக்க கூடாது - அதிமுக மனு
சென்னை: தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டுமெனத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை மனு கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி எண்ணப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையைப் பாதுகாப்பாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியன்று தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டுமெனத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளர் பாபு முருகவேல் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "பல்வேறு மாவட்டங்களிலிருந்து மே 1ஆம் தேதி, அதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல்நாளே தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளதாக அதிமுகவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் எப்பொழுதும் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறையின்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று தான் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தோம்" என்று தெரிவித்தார் .
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைமுறை கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதே போலவே இந்த முறையும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அதை ஏற்கனவே நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications