விசிகவை தேடி.. கூடவே இருந்த புரட்சி பாரதத்தை கைவிட்டுட்டாரே! எடப்பாடி எடுத்த முடிவு.. பறந்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுகவின் கூட்டணியில் இடம் அளிக்கப்படவில்லை. கூட்டணியில் எங்கும் போட்டியிட அதிமுக அனுமதிக்கவில்லை. இது அக்கட்சியின் ஆதரவாளர்கள் இடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தமிழ்நாட்டில் 33 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

AIADMK did not give seat to Puratchi Bharatham Poovai Jaganmoorthi supporters are not happy

1.வடசென்னை - ராயபுரம் மனோ
2.தென்சென்னை - ஜெயவர்த்தன்
3.காஞ்சிபுரம் - ராஜசேகர்
4.அரக்கோணம் - ஏ.எல்.விஜயன்
5.கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
6.ஆரணி - கஜேந்திரன்
7.விழுப்புரம் - பாக்யராஜ்
8.சேலம் - விக்னேஷ்
9.நாமக்கல் - தமிழ்மணி
10.ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
11.கரூர் - கே.ஆர்.எல்.தங்கவேல்
12.சிதம்பரம் - சந்திரஹாசன்
13.நாகை - சுர்ஜித் சங்கர்
14.மதுரை - சரவணன்
15.தேனி - நாராயணசாமி
16.ராமநாதபுரம் - ஜெயபெருமாள்
17.கோவை - சிங்கை ராமச்சந்திரன்
18.பொள்ளாச்சி- கார்த்திக் அப்புசாமி
19.திருச்சி - கருப்பையா
20.பெரம்பலூர் - சந்திரமோகன்
21.மயிலாடுதுறை - பாபு
22.ஸ்ரீபெரும்புதூர் - பிரேம் குமார்
23.தருமபுரி - அசோகன்
24.திருப்பூர் - அருணாசலம்
25.நீலகிரி - லோகேஷ்
26.வேலூர் - பசுபதி
27.திருவண்ணாமலை - கலியபெருமாள்
28.கள்ளக்குறிச்சி - குமரகுரு
29.சிவகங்கை - சேவியர் தாஸ்
30.நெல்லை - சிம்லா முத்துச்சோழன்
31.புதுச்சேரி - தமிழ்வேந்தன்
32.தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
33.கன்னியாகுமரி - பசிலியா நசரேத்

தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்த்து உள்ள 40 தொகுதிகளில், 33 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இது போக தேமுதிக 5 இடங்களில் போட்டியிடுகிறது.

பூவை ஜெகன்மூர்த்தி: லோக்சபா தேர்தலில் பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுகவின் கூட்டணியில் இடம் அளிக்கப்படவில்லை. இது அக்கட்சியின் ஆதரவாளர்கள் இடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

விசிகவை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி முயன்று வந்தார். அதிலும் அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம்.அவர்களுக்கு நிறைய இடம் கிடைக்கும். வராவிட்டால் 'Dont care' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக அழைப்பு விடுத்தார்.

அதேபோல் அதிமுகவின் மற்ற தலைவர்களும் கூட்டணிக்கு விசிகவை அழைத்தனர். ஆனால் அது எதுவும் பயன் அளிக்கவில்லை. விசிக திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்துள்ளன.

விசிக போச்சு: விசிகவை தேடிக்கொண்டு இருந்த அதிமுக கூடவே இருந்த பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு இடம் வழங்காமல் ஏமாற்றி உள்ளது. கீழ்வைத்தினான்குப்பம் சட்டசபை தொகுதியில் ஏற்கனவே பூவை.ஜெகன்மூர்த்தி அதிமுக சின்னத்தில் எம்எல்ஏவாக இருக்கிறார்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் அந்த கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நேற்று இரவே அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாத கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருமணநல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொகுதி ஒதுக்கப்படவில்லை என்றால் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக வேலை செய்வோம். அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக கண்டிப்பாக களப்பணிகளை செய்வோம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+