தேர்தலில் தோற்றதால் அதிருப்தி.. அவரைத் தூக்கு.. இவரைத் தூக்கு.. மா.செக்களை மாற்ற அதிமுக திட்டம்?
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. இதனால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் மாவட்ட செயலாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். இதையடுத்து தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்களை மாற்ற அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.அதன் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பல இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர். அதிமுகவினரும் 3லட்சம் முதல் 4 லட்சம் வாக்குகள்வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.
22 தொகுதி இடைத்தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இதில் 21 தொகுதிகளில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று இருந்தது. தோல்வி அடைந்த பல தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாக இருந்தவை ஆகும்.

பாஜகவினர் பகீர் புகார்
இந்த தேர்தல் தோல்வியால் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சோகத்தில் உள்ளனர். இதற்கிடையே கூட்டணி கட்சியாக பாஜக அதிமுக தலைமையிடம் புகார் அளித்துள்ளனர் தங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தங்களை வெற்றி பெறவைக்க முயற்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

பொன் ராதா படுதோல்வி
குறிப்பாக தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை வெற்றி பெற்று இருந்தால் மத்திய அமைச்சர் ஆகியிருந்திருப்பார். ஆனால் திமுகவின் கனிமொழியிடம் சுமார் 3லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தார். இதேபோல் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் தோல்வி அடைந்தார். இந்த இரண்டு தோல்விக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று பாஜகவினர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளனர்.

மாற்றப்படும் மாவட்ட செயலாளர்
இதையடுத்து விரைவில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தொண்டர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஏ அசோகனை அதிமுக தலைமை மாற்றக்கூடும் என்கிறார்கள். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ அணி செயலாளராக உள்ள சி.என்.ராஜதுரைக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என வலியுறுததி மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து மனு அளித்துள்ளார்களாம்.

செல்லூர் ராஜு
இது ஒரு புறம் எனில் தன் மகன் தோற்றதால், மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக ராஜன் செல்லப்பா போர்க்கொடி உயர்த்திவருகிறார். இதுபோல் தேர்தலில் தோல்வி அடைந்த பலர் சிறப்பாக செயல்படவில்லை என அதிமுகமாவட்ட செயலாளர்கள் மீது முதல்வர் பழனிச்சாமியிடம் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது.

நடவடிக்கை உறுதியாம்
தேர்தலில் யார் யாரெல்லாம் வாக்காளர்களுக்கு பணத்தை வழங்காமல் அமுக்கினார்கள், யார் யாரெல்லாம் சிறப்பாக வேலை செய்யவில்லை என்பது தொடர்பான நிர்வாகிகள் பட்டியலை அதிமுக தலைமை உளவுத்துறை மூலம் எடுத்து வருகிறதாம். தற்போது தேர்தலில் தோல்வி அடைந்தவர்களை சமாதானம் செய்ய அதிமுகவில் உள்ள 50 மாவட்ட செயலாளர்கள் பதவிகளில் சிலவற்றை கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரஉள்ளதால் அதிமுகவில் நிலவும் அதிருப்தியை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் முதல்வர் பழனிச்சாமி அதிரடி முடிவு எடுப்பார் என்கிறார்கள் அதிமுகவினர்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications