உதய்யிடம் பேசிய தொழிலதிபர்! ரஜினி சொன்னதும் உருகிய ஸ்டாலின்! எடப்பாடியும் வந்துட்டாரே! அப்போ அதுதானே
சென்னை: தமிழக அரசியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. விஜய்யை ஆட்சி அமைக்க முடியாத சூழலை தமிழக கவர்னர் ஆர்.வி. ஆர்லேகர், சட்ட ரீதியாக தமக்கு முன்னால் இருக்கும் பாயிண்டுகளை பயன் படுத்தி கேம் ஆடிக் கொண்இருந்தாலும், இதற்கு பின்னால் பாஜக இருந்து வருகிறது என்பது அரசியலின் ஆழத்தை அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. பாஜக மட்டுமல்ல, திமுக, அதிமுகவும் மறைமுக காய்களை நகர்த்துகின்றனர்.
விஜய் ஆட்சிக்கு வரவேண்டும்; அதன் மூலம் திமுகவின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்றுதான் துவக்கத்தில் திட்டமிட்டது பாஜக தேசிய தலைமை. ஆனால், காங்கிரசை தனது கூட்டணியில் விஜய் இணைத்துக் கொண்டப்பிறகு பாஜகவின் திட்டத்தில் மாற்றம்.

விஜய்யும் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைத்தால், விஜய்யின் செல்வாக்கை வைத்து தமிழகத்தில் காங்கிரஸ் அரசியல் வளர்ச்சியை அடையும். அது, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் 39 சீட்டுகளை கைப்பற்றவும் இந்த கூட்டணியால் முடியும். அந்த வகையில் காங்கிரசின் வளர்ச்சியை பாஜக விரும்பவில்லை. அதனாலேயே, தவெக ஆட்சி அமைப்பதற்கு திரை மறைவு வேலைகளை செய்து கொண்டிருக்கிறது.
தவெக ஆட்சி அமைப்பதற்கு திரை மறைவு வேலை
அதன் ஒரு கட்டம் தான், திமுக ஆதரவுடன் நீங்கள் ஆட்சி அமைக்க முயற்சியுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமியுடன் விவாதித்திருக் கிறது பாஜக. இது தொடர்பாக, எடப்பாடியுடன் பியூஸ் கோயலும், எடப்பாடியின் மகன் மிதுனுடன் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவும் விவாதித்துள்ளனர். இதனை அடுத்து, உதயநிதியின் பார்வைக்கு இந்த யோசனைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு தொழில திபர், உதயநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு, யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனா, இவ்வளவு பெரிய முடிவு களை தலைவர் (ஸ்டாலின்) தான் எடுக்க முடியும். அவரிடம் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் உதயநிதி.
அதன்படி, ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அதிமுக தரப்பிலிருந்து வரும் யோசனைகளை உதயநிதி தெரிவிக்க, அதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. பிடிவாதமாக மறுத்து விட்டார். ஆனால், ஸ்டாலின்னுக்கு குடும்பத்திடமிருந்து அழுத்தம் அதிகரித்தபடி இருந்தது. இந்த நிலையில், ஸ்டாலின் ஏற்க மறுக்கிறார் என்கிற தகவல் களை பியூஸ்கோயலுக்கு தெரியப்படுத்தினார் எடப்பாடி. அதேபோல, ஜெய்ஷா தனது தந்தை அமித் சாவிடம் ஸ்டாலினின் நிலைப்பாட்டை விவரித்துள்ளார்.
பாஜக வேறு ஒரு ரூட்டில் திட்டமிட்டது
இப்போதுதான் பாஜக வேறு ஒரு ரூட்டில் திட்டமிட்டது. உடனே ரஜினியிடம் பேசி ஸ்டாலினை சந்தியுங்கள் என பாஜக தலைமை கேட்டுக் கொள்ள, திடீரென ஸ்டாலினை சந்தித்தார் ரஜினிகாந்த். இதில் பல விசயங்கள் பேசப்பட, மெல்ல மெல்ல மெல்டாகினார் ஸ்டாலின்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சி அமைக்க முன் வரும் பட்சத்தில், எடப்பாடிக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் மனநிலைக்கு வந்தார். அதனையடுத்து, திமுக ஆதரித்தால் மட்டும் அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்து விடாது, திமுக கூட்டணி கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்; அதிமுக கூட்டணிக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என விவாதங்கள் நடந்திருக்கிறது. உடனே திமுக கூட்டணியிலுள்ள கட்சிகளின் தலைவர்களை அழைத்து, உங்கள் நிலைப்பாடு என்ன? என்று ஸ்டாலின் கேட்க, கூட்டணிக்கு நீங்கள் தான் தலைவர் ; நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைக்கிறோம் என சொல்லி விட்டு வந்தனர்.
ஆனால், விசிகவை பொறுத்த வரைக்கும், பாமக இருக்கும் கூட்டணிக்குள் விசிக இருக்காது எனும் முடிவில் இருக்கிறார். ஆனால், திமுக மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்தால் பாமக விசயத்தில் என்ன சமரசம் செய்து கொள்வது என இன்று நடக்கவிருக்கும் விசிக உயர்நிலை கூட்டத்தில் திருமாவளவன் விவாதிக்க விருக்கிறார்.
இந்த சூழலில்தான், திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தைக் கூட்டி, எந்த ஒரு அவசர முடிவுகளையும் எடுக்க கட்சி தலைவருக்கு (ஸ்டாலின்) அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் உள்ளார்ந்த விசயங்களை ஆராய்ந்தால், அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு தருவது என்பதாகவே இருக்கிறது.
அந்த வகையில், விஜய்யை முதல்வராவதைத் தடுக்க அதிமுக-திமுக கைக்கோர்க்கிறது என்கிற செய்திகளால், திமுக-அதிமுகவில் உள்ள உண்மையான இரண்டாம் நிலை தலைவர்கள், இப்படிப்பட்ட உறவு உருவாவதை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதிமுகவை ஆதரிக்கலாம்
குறிப்பாக, அதிமுகவை ஆதரிக்கலாம் எனும் திமுகவின் நிலைப்பாட்டில் கனிமொழி, ஆ.ராசா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் உடன் பாடில்லாமல் இருக்கின்றனர். அதிமுகவை ஆதரிப்பதை திமுக தொண்டர்களே ஏற்க மாட்டார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும், மக்களிடமிருந்து நாம் அன்னியப்பட்டு நிற்போம் என்ற அளவில் எதிர்ப்புகள் இருந்து வருகிறது.
அதேபோல, எதிர்மனநிலை அதிமுக எம்.எல்.ஏ.க்களிடமும் இரண்டாம் நிலை தலைவர்களிடமும் இருக்கிறது. பாண்டிச்சேரி ரெசார்ட்டில் முகாமிட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் எடப்பாடி பேசும் போது, திமுக ஆதரவுடன் நாம் ஆட்சி அமைப்பது பொருந்தா உறவாகவே பார்க்கப்படும். இதன் மூலம் மக்களிடம் இன்னும் வெறுப்பினை நாம் சம்பாதிக்க வேண்டியிருக்கும். தவெகவை ஆதரிப்பது தான் சரியாக இருக்கும். தவெகவை ஆதரித்தால் மக்களிடம் அதிமுகவின் இமேஜ் உயரும் என்று பல எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியின் கண் அசைவில் அதிமுகவும், திமுகவும் எடுக்கும் இந்த திடீர் மாற்றங்கள், இரு கட்சிகளின் எதிர்கால அரசியலுக்கு உகந்தது அல்ல என்றே அரசியல் விமர்சகர்களிடம் எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications