Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

170 தொகுதிகளுக்கு குறையாமல் நிற்போம்.. பியூஸ் கோயலிடம் கறாராக சொன்ன எடப்பாடி? அதிமுகவின் மாஸ் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயல் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் அதிமுக மட்டும் 170 தொகுதிகளில் போட்டியிடுவதில் தீர்க்கமாக உள்ளதாகவும், பாஜகவிற்கு 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சொல்லப்படுகிறது.

பாஜக 50 தொகுதிகளை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், எடப்பாடியின் முடிவு பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என்றும், கள நிலவரம் குறித்து தான் பேசினோம் என்றும் கூறினார்.

Edappadi Palaniswami Piyush Goyal AIADMK BJP

சூடுபிடிக்கும் அரசியல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 4 முனைப் போட்டி நிலவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சிகள் இடையே 4 முனைப் போட்டி நிலவ உள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள உள்ளன.

தவெக கூட்டணிக்கு தயார் என அறிவித்து கடையைத் திறந்து வைத்திருந்தாலும், தற்போது வரை எந்தக் கட்சியும் கூட்டணிக்கு அணுகவில்லை. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை யாருடனும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை உள்ளன.

அதிமுக பாஜக கூட்டணி

தனது கூட்டணியில் உள்ள கட்சிகளை சிந்தாமல் சிதறாமல் வைத்து தேர்தலைச் சந்திக்க திமுக ஆயத்தமாகி வருகிறது. மறுபக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த பிறகு தங்களுக்கு உரிய மரியாதை இல்லை எனக் கூறி ஓ. பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் வெளியேறினர்.

அவர்களை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை மீண்டும் கூட்டணிக்குள் இணையப் போவது இல்லை எனக் கூறி வந்த டிடிவி தினகரனின் பேச்சில் கடந்த சில நாட்களாக மாற்றம் தெரிகிறது. இதனால் அவரை கூட்டணிக்குள் கொண்டு வரும் பாஜக முயற்சி கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதிமுக மட்டும் 170 தொகுதிகள்?

இந்தச் சூழலில்தான் இன்று பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னை வந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யாரை சேர்க்க வேண்டும், எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் அதிமுக மட்டும் 170 தொகுதிகளில் போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜகவிற்கு 23 தொகுதிகள், பாமக 23, தேமுதிக 6, அமமுக 6, ஓபிஎஸ் 3, தமிழ் மாநில காங்கிரஸ் 3 என தொகுதிகள் தரத் தயார் என்று அதிமுக பாஜகவிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

பாஜகவுக்கு 23 தொகுதிகள் மட்டும்?

பாஜக 50 தொகுதிகளை கேட்ட நிலையில், அதிகபட்சம் 23 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கறாராக சொல்லிவிட்டாராம். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 21 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், கூடுதலாக 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக சொல்லப்படுகிறது.

தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்றால் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தனது இந்த முடிவை திட்டவட்டமாக இன்று தன்னை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர்களிடம் கூறிவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சு

பாஜக தலைமை 23 தொகுதிகளுக்கு ஓகே சொல்லுமா இல்லை, எடப்பாடியுடன் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு அதிக தொகுதிகளை கேட்குமா என்பது பியூஸ் கோயல் டெல்லி சென்று அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து பேசிய பிறகு தெரியவரும் என்று சொல்லப்படுகிறது. குறைந்தது 50 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில், எடப்பாடியின் இந்த முடிவு பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

1.30 மணி நேரம் சந்திப்பு நடந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை என்றும், கள நிலவரம் குறித்து தான் பேசினோம் என்றும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+