ஓபிஎஸ்க்கு கிடைத்த பதவி தெரியுமா? கடைசி நேரத்தில் எடப்பாடி கொடுத்த ஆஃபர்? கோலாகல ஸ்ரீநிவாஸ் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் கடந்த ஆண்டு இணை பொதுச்செயலாளர் பதவி தருவதாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபரை அவர் ஏற்கவில்லை. இப்போது ஒபிஎஸ்க்கு அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாஸ் தெரிவித்தார்.

மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் 'ஒன் இந்தியா அரசியல்' யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அண்ணாமலை பாதயாத்திரை குறித்து பேசியதுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

AIADMK edappadi palanisamy offered Joint General Secretary post to OPS - Kolahala Srinivas, Journalist

ஓ பன்னீர்செல்வம் குறித்து பேசும் போது, "தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்துக்கு அவரை அழைக்கவே இல்லை. ஆனால் அழைப்பே இல்லை என்ற போது, அழைப்பு இல்லை.. அழைப்பு இல்லை என்று கேட்டுக்கொண்டே இருப்பார்களா.. இது எவ்வளவு அசிங்கமான விஷயம்.. உண்மையிலேயே இதுக்காக அவர்(ஓபிஎஸ்) போராடி இருந்தார்னா, சரியான சமத்தாக இருந்தார்னா.. டெல்லியில் என்டிஏ கூட்டணியில் தன்னை முன்னிறுத்தி ஜெயித்து காட்டியிருக்க வேண்டும். அதுல அவர் ஜெயித்திருக்க வேண்டும். அதுதான் அதிகாரப்பூர்வமானது. அங்கே அவரால் நுழையவே முடியவில்லை.

அதுக்கு அப்புறம் இங்க வந்து எங்கயாவது தலையை காட்டிக்கிறது ஒட்டிக்கிறது.. அமித்ஷா எதாவது பங்கசனுக்கு வந்தால், முன்வரிசையில் வந்து டக்குன்னு உட்கார்ந்துட்டு, அமித்ஷா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன் என்று அடுத்து இரண்டு நாள் மீடியாவில் மைலேஜ் எடுத்துக்கிறார். இப்படியே பண்ணிக்கிட்டு எல்லாம் ஒருத்தர் அரசியல் பண்ண முடியாதுங்க..

ஓபிஎஸ் வந்து தனது அரசியலை மொத்தமாக தொலைத்துவிட்டார். இனி வந்து என்னுடைய பார்வையில், ஓபிஎஸ் இன் அரசியல் முடிவுக்கு வந்தாச்சு.. ஓபிஎஸ் என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக்கொண்டு போகட்டும்..ஓபிஎஸ்க்கு சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலேயே எந்த செல்வாக்கும் கிடையாது. சமூகத்திலும் செல்வாக்கு கிடையாது. கட்சிக்குள் ஒரு செல்வாக்கும் கிடையாது.

நீங்கள் ஒன்றே ஒன்றை யோசித்து பாருங்கள், அதிமுகவில் அவர் கோட்டை விட்டுவிட்டார்.. விட்டதை அதிமுகவில் பிடிப்பதற்கு யாராவது ஒருத்தர் பாஜகவில் மனு போட்டுகிட்டு இருப்பாங்களா.. இவரு எப்படிப்பட்ட அரசியல்வாதி? ஒரு கட்சியில் விட்டதை பிடிக்க இன்னொரு கட்சியிலா மனு போட்டுக்கிட்டு இருப்பீங்க..

AIADMK edappadi palanisamy offered Joint General Secretary post to OPS - Kolahala Srinivas, Journalist

என்ன செய்திருக்க வேண்டும்... அந்த கட்சியிலே நேற்று வரை நீங்கள் தான் (ஓபிஎஸ்) நம்பர் ஒன்னாக இருந்தீர்கள்.. அன்னைக்கு இருந்த உங்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் நீங்கள் தக்க வைத்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ப அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும். ஓபிஎஸ் செல்வாக்குடன் இருந்த காலத்தில் தன்னையும் தன் மகனையும் பற்றி மட்டுமே யோசித்துள்ளார்.. வேறு யாரை பற்றியும் அவர் யோசிக்கவில்லையே..

விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனை கேட்டு பாருங்க.. அதிமுகவில் இருந்த போது அவர் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர்.. அவர் மனசு வெறுத்து, ஓபிஎஸ்சை நிராகிரிப்பதற்காகவே அண்ணா திமுகவை நிராகரித்துவிட்டு வெளியே வந்தார். அங்கு ஒரு இடைத்தேர்தல் நடந்தது. கெஞ்சினார். ஆனால் ஓபிஎஸ் ஆல் சீட் வாங்கித்தரமுடியவில்லை.. ஒன்றுமே செய்யவில்லை.. எடப்பாடி செல்வாக்கில் வேறு ஒருவருக்கு சீட் கொடுக்கப்படுகிறது. அந்த வெறுப்பில் தான் அவர் திமுகவில் சேர்ந்தார். இன்று அவர் திமுக எம்எல்ஏவா சட்டசபையில் மார்க்கண்டேயன் இருக்கிறார். இப்படி எத்தனையே பேரை கேட்க முடியும்.

ஓபிஎஸ் முழுக்க முழுக்க கட்சிக்கு வெளியில் இருக்கிறார். இனியும் அவர் கட்சிக்கு உள்ளே வர முடியும் என்று தோனவில்லை. உள்ளே வருவதற்கு ஒரே ஒரு வாய்ப்பு, போன ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது.. அவரது வீட்டில் வைத்தே பேசினார்கள்.. எடப்பாடியார் சைடில் நத்தம் விஸ்வநாதன்.. திண்டுக்கல் சீனிவாசன் இவங்க எல்லாம் போயிருந்தாங்க.. ஓபிஎஸ் சைடில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஓபிஎஸ் எல்லாம் இருந்தாங்க..

ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, பொதுச்செயலாளர் பொறுப்புக்கு பதில் இணை பொதுச்செயலாளர் பதவி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அதுவந்து நிரந்தர இணை பொதுச்செயலாளர் என்று கூட போட்டு கொடுத்திரலாம் என்று எடப்பாடியே போன் போட்டு பேசி ஓகே பண்றார். அப்ப ஓபிஎஸ் தனது மகனுக்கு அமைச்சர் பதவி கேட்டேன்.. என்று ஆரம்பிக்கிறார். அதற்கு அவங்க பதில் சொல்கிறார்கள்.. ரவீந்திரநாத்துக்கு கொடுப்பதாக இருந்தால் தம்பித்துரை அவரை விட சீனியர் , அவர் கேட்கிறார்.. ஒரு கேபினர் அமைச்சர் தான் கொடுக்கிறார்கள். யாருக்கு கொடுப்பது ? யாருக்கும் வேண்டாம் என்று முடிவு செய்ததை கூறியிருக்கிறார்கள்.

என் மகனுக்கு மந்திரி பதவி கொடுப்பதற்கு நானும் எடப்பாடியும் சேர்ந்து சம்மதித்தால் கொடுப்பார்கள், அதற்கு கேட்டு சொல்லுங்க என்று ஓபிஎஸ் கேட்டார். அதற்கும் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கிறார். இது நடந்து கொண்டிருக்கும் போது திடீரென வைத்திலிங்கம் எழுந்திருக்கிறார்.. நாங்க கட்சியை கைப்பற்றி மேல போகலாம்னு பார்த்தால், ஓபிஎஸ்சை நம்பர் 2 வாக ஆக்க பார்க்கிறீங்களா என்று கேட்கிறார்.. பேசிக்கொண்டிருக்கும் போதே நத்தம் விஸ்வநாதனின் கன்னத்தில் வைத்திலிங்கம் அடித்து விடுகிறார். அங்கே தள்ளுமுள்ளு அடிதடி நடக்கிறது.

அதற்கு பிறகு விலக்கி விட்டு வெளியே வருகிறார்கள். அதற்கு பிறகு ஓபிஎஸ்க்கு எந்த அழைப்பும் இதுவரை விடுக்கப்படவில்லை.. அது ஓபிஎஸ் செய்த மிகப்பெரிய தவறு. அன்றைக்கு வைத்திலிங்கத்தை அவர் கட்டுப்படுத்தி இருந்தால் இன்றைக்கும் அவர் அண்ணா திமுகவில் இருந்திருக்க முடியும். இந்த விஷயம் முழுவதையும் அக்டோபரில் நாமக்கல்லில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கமணி கூறியிருப்பார். ஓபிஎஸ் முழுக்க முழுக்க தவறான நபர்களின் வழிகாட்டலில் தவறான பாதையை தேர்ந்தெடுத்து போய்விட்டார் " என பத்திரிக்கையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார். அண்ணாமலை பாதயாத்திரை குறித்தும் பல விஷயங்களை கோலாகல ஸ்ரீநிவாஸ் பேசியிருக்கிறார். அதனை வீடியோவில் பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+