அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே!
சென்னை: தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கின்றன. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி உடன்பாட்டை இன்னும் இறுதி செய்யவில்லை. இழுபறி நீடித்தபடியே இருக்கிறது.
எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பதை பேச்சுவார்த்தை டேபிளுக்கு செல்வதற்கு முன்பாக சீக்ரெட்டாக பேசி முடிவெடுத்துவிட்டு அதன் பிறகு பேச்சுவார்த்தை குழுவினருடன் வெளிப்படையாக அமர்ந்து இறுதி செய்வதுதான் அரசியல் கட்சிகளின் வியூக நகர்வுகளாக இருக்கிறது.

அந்த வகையில் 2 பிரதான கட்சிகள் நடத்தும் ரகசிய பேச்சு வார்த்தையில், குறிப்பிட்ட சில பல தொகுதிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் கேட்பதால், தொகுதிகளை இறுதி செய்ய முடியாமல் இழுபறி நீடிக்கிறது. கூட்டணி கட்சிகள் விடாப்பிடியாக கேட்கும் பல தொகுதிகள் திமுக மற்றும் அதிமுகவின் சிட்டிங் தொகுதிகளாக இருப்பதும் இழுபறிக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக் குழுவினருடனும், அதிமுகவின் தேர்தல் வியுக அமைப்பின் முக்கியஸ்தர்களுடனும் இன்று ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இரு தரப்பினரிடமும் தனித்தனியாக ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிமுக கட்டாயம் போட்டியிட வேண்டிய தொகுதி
எந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவுக்கு எந்தெந்த தொகுதிகள் சாதகமானவை? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம்? என்கிற ஒரு லிஸ்ட்டும், பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யலாம் என்கிற ஒரு லிஸ்ட்டையும் எடப்பாடியிடம் தேர்தல் வியூக நிபுணர்கள் கொடுக்க விருக்கிறார்களாம். ஏற்கனவே, அதிமுக கட்டாயம் போட்டியிட வேண்டிய தொகுதிகளும் மற்றும் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளும் அடங்கிய ஒரு பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வைத்திருக்கிறார்.
தேர்தல் வியூக நிபுணர்கள் தருகிற பட்டியலையும், தம்மிடம் உள்ள பட்டியலையும் அலசி, இறுதியில் ஒரு பட்டியலை தயாரித்து, அதனை அதிமுகவின் பேச்சுவார்த்தை குழுவினரிடம் கொடுத்து, அதற்கேற்ப பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்யுங்கள் என அறிவுறுத்தவிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆலோசனைக் கூட்டம்
இதற்காகத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கத்தான் எடப்பாடி திட்டமிட்டு ஏற்கனவே பாஜக தலைமைக்கு தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது பாஜக.
அதாவது, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகளுக்கு மேலே கிடைக்காது என்பதால் காங்கிரசுக்கு நிகராக அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் எண்ணிக்கையும் 25 ஆக முடிவு செய்யப்பட்டதாம். ஆனால், காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் கடந்த ஒரு வாரமாக, காங்கிரசை விட கூடுதலாக 1 சீட் வேண்டும் என சொல்லி 29 சீட்டுகள் கேட்டு எடப்பாடி பழனிச்சாமியிடம் மல்லுக்கட்டி வருகிறது பாஜக. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், காங்கிரசை விட 1 சீட் குறைவாக ஒதுக்கி அதாவது பாஜகவிற்கு 27 சீட் ஒதுக்கி அதற்கு பாஜகவை சம்மதிக்க வைத்து, பாஜகவுக்கு நாங்கள் அடிமை அல்ல ; நீங்கள் தான் காங்கிரசுக்கு அடிமை என திமுகவை விமர்சிக்கும் நோக்கத்தில் எடப்பாடி திட்டமிட்டிருப்பதாகவும் அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது. எண்ணிக்கை இழுபறியும் தொகுதிகள் இழுபறியும் ஒரு சேர இணைந்திருப்பதால், இரண்டையும் இறுதி செய்து ஒரே நேரத்தில் பட்டியலை வெளியிடலாம் என்றும் எடப்பாடியிடம் சீனியர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications