ஓபிஎஸ் அருகே உட்காரணுமா? எடப்பாடிக்கு சிக்கல்! இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. நாளை சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க நிலையில் இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க உள்ளது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நாளை காலை தொடங்க உள்ளது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடருக்கு எதிராக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் தனி தனியாக ஆலோசனை செய்வது வழக்கம். சட்டசபையில் என்னென்ன பேச வேண்டும், என்ன மாதிரியான பிரச்சனைகளை எழுப்ப வேண்டும் என்று ஆலோசனை செய்யப்படும்.

AIADMK Edappadi Palanisamy to hold MLA meeting on sitting near O Panneerselvam in Assembly

அதன்படியே இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில்தான் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக ஆலோசனைகள் செய்யப்பட்டன. இதனால் இன்று நடக்கும் கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் பற்றி மட்டுமே ஆலோசனை செய்யப்பட உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்கள் எல்லோரும் இன்று நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு எதிராக என்ன மாதிரியான பிரச்சனைகளை கையில் எடுக்கலாம். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி பேசலாமா என்றும் அதிமுக கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளனர்.

AIADMK Edappadi Palanisamy to hold MLA meeting on sitting near O Panneerselvam in Assembly

ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக கொறடா வேலுமணி சார்பாக சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுகிறார். ஆர்பி உதயகுமாரை துணை தலைவராக தேர்வு செய்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்குவது என்றால் அதற்கு சபாநாயகர்தான் அனுமதி அளிக்க வேண்டும். அப்பாவு என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது.

இது தொடர்பாக இரண்டாவது முறையாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு மீண்டும் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது. இது தொடர்பாகவே அப்போதே விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, இதில் சட்டப்படி, நியாயயப்படி, விதிப்படி நாங்கள் நடப்போம். ஜனநாயக முறைப்படி, ஒருதலைபட்சம் இல்லாமல்.. விதிப்படி நாங்கள் நடப்போம், என்று கூறி உள்ளார்.

AIADMK Edappadi Palanisamy to hold MLA meeting on sitting near O Panneerselvam in Assembly

இதனால் தற்போது தமிழ்நாடு சட்டசபையில் இருக்கை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எடப்பாடிக்கு அருகே ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று கோரிக்கையை எடப்பாடி தரப்பு வைத்துள்ளது. எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர் என்பதால் இரண்டு பேரையும் அருகருகே அமர வைத்துள்ளனர். இப்படி அமர வைக்க கூடாது. ஓ பன்னீர்செல்வதை வேறு இடத்தில் அமர வைக்க சொல்லலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த கோரிக்கையில் இன்னும் சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில் நாளை கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா அல்லது கூட்டத்தை புறக்கணிக்கலாமா என்று அதிமுக எம்எல்ஏக்கள் சார்பாக இன்று முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காததை கண்டிக்கும் வகையில் அவையை புறக்கணிக்கலாமா என்றும் எடப்பாடி தரப்பு ஆலோசனை செய்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+