ஐபிசிக்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதாவா? அப்பட்டமான இந்தி திணிப்பு..எடப்பாடி பழனிசாமிக்கு வந்த கோபம்!
சென்னை: அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு எனவும், இந்தி திணிப்பு பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
150 ஆண்டுகளாக இந்தியாவின் நீதி மற்றும் காவல் துறையில் அமலில் இருந்த ஐபிசி, சிஆர்பிசி உள்ளிட்ட சட்டங்கள் நீக்கப்பட்டு புதிதாக 3 குற்றவியல் நடைமுறை சட்டங்கள் அமல்படுத்தப்படும் என பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இன்று முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தன.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததால் ஏற்கனவே நீதி மற்றும் காவல் துறையில் இருந்த ஐபிசி, சிஆர்பிசி உள்ளிட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியன் பீனல் கோட் எனப்படும் ஐபிசி இந்திய தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதாவது சிஆர்பிசிக்கு பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவும், இந்திய ஆதாரச் சட்டம் அதாவது இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் 1872க்கு மாற்றாக பாரதிய சக்ஷா சன்ஹிதாவும் அமலுக்கு வந்துள்ளது.
அதே நேரத்தில் சட்டங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை எனவும், ஆங்கிலத்தில் இருந்த பெயர்களை இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் மட்டுமே மாற்றியிருப்பதாக விமர்சங்கள் எழுந்துள்ளன. இன்று அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறை சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவிலேயே முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு என அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது.

முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட, அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.
இந்தி திணிப்பாணது பல மொழிகள் - பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும் நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
-
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications