கூட்டணியே முடிவாகலை.. வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி.. அதிமுக அதிரடி!
சென்னை: அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் ஜனவரி 9 முதல் ஜனவரி 13 வரை நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடக்கும் என்றும், முதல் நாளில் கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களுக்கான நேர்காணல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதமே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23 வரை முதற்கட்டமாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதையடுத்து மீண்டும் டிசம்பர் 28 முதல் 31 வரை 2ஆம் கட்டமாக விருப்ப மனு பெறப்பட்டது.

மொத்தமாக சுமார் 10,100 பேர் விருப்ப மனு அளித்திருக்கின்றனர். அதில் எடப்பாடி பழனிசாமி பெயரில் மட்டும் சுமார் 2,700 விருப்ப மனுக்களும், கேரளா மற்றும் புதுச்சேரி தேர்தலில் போட்டியிட சுமார் ஆயிரம் பேரும் விருப்ப மனு அளித்தனர். இந்த நிலையில் அடுத்தக் கட்டமாக விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணலை எடப்பாடி பழனிசாமி நடத்த உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி 9 முதல் 13 வரை விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஜனவரி 9ஆம் தேதி கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேகம் மாநகரை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
தொடர்ந்து அதே நாளில் சேலம் புறநகர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்க உள்ளது. ஜனவரி 10 காலையில் கன்னியாகுமரி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் அளிக்கப்பட உள்ளது. பின்னர் மாலையில் திருவாரூர், மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேர்காணல் நடக்கிறது.
ஜனவரி 11ஆம் தேதி விருதுநகர் மேற்கு, கடலூர் கிழக்கு, மேற்கு வடக்கு, தெற்கு தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடக்க உள்ளது. பின்னர் மாலையில் நாகை, மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் அளிக்கப்பட உள்ளது.
பின்னர் ஜனவரி 12 காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்களுக்கும், ஜனவரி 13ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் விருப்ப மனு அளித்தவர்களுக்கும் நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.; அதேபோல் புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கும் ஜனவரி 13ல் நேர்காணல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியாவதற்கு முன்பாகவே வேட்பாளர்களுக்கான நேர்காணலை எடப்பாடி பழனிசாமி தொடங்கவிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications