விருப்ப மனு வாங்காத நிர்வாகிகள்.. களையெடுக்கும் எடப்பாடி.. அதிமுகவில் வெடிக்கும் பூகம்பம்!
சென்னை: அதிமுக தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட நிர்வாகிகளில் யாரெல்லாம் விருப்ப மனு அளிக்கவில்லை என்ற பட்டியலை எடுக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதில் யாரெல்லாம் விஜய் கட்சியுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று ஆராய்ந்து தேர்தலுக்கு முன்பாக களையெடுப்பு நடவடிக்கையை தொடங்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிமுக சார்பாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் டிசம்பர் 15 முதல் 23 வரை நடைபெற்றது. தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 23 முதல் 31 வரை நேரம் அளிக்கப்பட்டது. இதன்படி அதிமுக சார்பாக சுமார் 10,200 பேர் விருப்ப மனுக்களை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதில் தமிழ்நாட்டில் சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். மீதமுள்ள விருப்ப மனுக்கள் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், புதுச்சேரியில் போட்டியிடவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் 10 ஆயிரம் பேராவது தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்க வேண்டும் என்று மறைமுகமாக உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பெயரில் இத்தனை விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, நிர்வாகிகள் சுமார் 7 ஆயிரம் பேர் மட்டுமே விருப்ப மனுக்கள் அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைந்த பின் பல்வேறு அதிமுக புள்ளிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
ஏற்கனவே சேலம் முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணன் தவெகவில் இணைந்துவிட்டார். கொங்கு மண்டலத்தில் இன்னும் சில முன்னாள் எம்எல்ஏ-க்கள், முக்கிய புள்ளிகள் விஜய் கட்சியில் இணையலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அதிமுக தரப்பில் மாவட்ட வாரியாக எதிர்பார்க்கப்பட்ட யாரெல்லாம் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யவில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி ஆராய அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த விசாரணையின் முடிவில் எந்தெந்த நிர்வாகிகள் எல்லாம் விஜய் கட்சிக்கு செல்லும் முடிவில் இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்யவும் கூறி இருக்கிறார். இதன் மூலமாக அதிமுகவில் விரைவில் களையெடுப்ப பணிகள் தொடங்கப்படலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களில் சீட் கிடைக்கவில்லை என்றால், விஜய் கட்சிக்கு செல்லும் திட்டத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதையும் அதிமுக தலைமை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விஜய் மீதான அட்டாக்கை அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை












Click it and Unblock the Notifications