ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் விஷயமாக அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் தவெகவுக்கு தாவுவது தான் இருந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலர் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது, அதிமுக வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் உருவாகியுள்ள இக்கட்டான சூழல், எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் அடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கட்டுக்கோப்பாக இயங்கி வந்த அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு தொடர்ந்து பல்வேறு உட்கட்சி சிக்கல்களை சந்தித்து வருகிறது. கிட்டத்தட்ட முன்னணி தலைவர்கள் வெளியேறினர் அல்லது வெளியேற்றப்பட்டனர்.

AIADMK Edappadi Palaniswami TVK

முதலில் சசிகலா, டிடிவி தினகரன், பின்னர் ஓ.பன்னீர்செல்வம், அதற்குப் பிறகு செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் அதிருப்தி என பல சோதனை கடந்து வந்துள்ளது. அனைத்து சவால்களையும் சமாளித்து கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் எடப்பாடி பழனிசாமி தனது கைகளில் கொண்டு வந்தார்.

அதிமுக

இருந்தாலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு கட்சிக்குள் புதிய புயலை உருவாக்கியது. ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தேர்தல் முடிவுக்குப் பிறகு தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து மறுபரிசீலனை செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

தவெக

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத சூழலில், மாவட்ட அளவில் கட்சியை நடத்துவதற்கான செலவுகளை பல முன்னாள் அமைச்சர்களே ஏற்று வந்தனர். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அமைந்தால் அந்த முதலீட்டுக்கு பலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக தவெக ஆட்சியைப் பிடித்தது, பலரது மனநிலையை மாற்றியமைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி

பின்னர் ஏற்பட்ட சமாதான தூதுக்களுக்கு பிறகு சிலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திரும்பினாலும், நான்கு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தொகுதிகள் காலியானது.
இதற்கிடையே முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தது கூடுதல் பரபரப்பரை உருவாக்கியது. அதுமட்டுமல்லாமல் பல மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகளும் தவெக நோக்கி நகர்ந்தனர்.

விஜய்

இதற்கு காரணம் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தான். ஆட்சியை கைப்பற்றிய பிறகு தவெக தொடர்ந்து புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது, பலரது கவனத்தை திசைதிருப்பியுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி என்ற அடையாளத்தை தவெக உருவாக்க முயற்சிக்கிறது. அதேநேரத்தில் அதிமுகவின் மிகப்பெரிய பலவீனமாக தலைமுறை மாற்றம் இல்லாதது சுட்டிக்காட்டப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகள்

கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பெரும்பாலும் மூத்த தலைவர்களே இருப்பதால், இளம் தலைமுறையினரை ஈர்ப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சமீப காலங்களில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினரே கட்சிக்குள் இளம் ரத்தம் தேவை என்ற கருத்தை வெளிப்படையாக முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிமுகவின் அரசியல் வலிமையை எளிதாக குறைத்து மதிப்பிட முடியாது என்பதும் அரசியல் களத்தின் மற்றொரு உண்மை.

கட்சி தாவல்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்த நிலையில் இருந்தும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. வாக்கு சதவீதத்திலும் தங்கள் வலிமையை தக்கவைத்துக் கொண்டது. இதனால் தற்போதைய விலகல்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், அது அதிமுகவின் அரசியல் அடித்தளத்தை முழுமையாக பாதித்துவிட்டதாக கூற முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதிமுக நெருக்கடி

அதேசமயம் தவெக தரப்பில் இருந்து தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளை இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிப்பாரா, நிர்வாக அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வாரா, தொடர்ந்து நிகழும் விலகல்களை எப்படி சமாளிப்பார் என்ற கேள்விகள் அனைத்தும் தற்போது எடப்பாடி பழனிசாமியை நோக்கி திரும்பியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+