Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீதிக்கு வந்த மோதல்.. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வெடித்த அதிமுக.. காரணம் இதுதானா? பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலைமறைக்காயாய் இருந்த அதிமுக பாஜக மோதல் இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அண்ணாமலை மீது அதிமுக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததற்கான காரணம் குறித்து இங்கே பார்க்கலாம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும் சமீப காலமாவே கூட்டணிக்குள் சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தததும் இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே எதிர்வினையாற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மட்டும் இன்றி அண்ணாமலையை விமர்சித்து விட்டு அக்கட்சியில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார் உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி அரவணைத்துக் கொண்டது அண்ணாமலைக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. கூட்டணி குறித்து அண்ணாமலையிடம் பேசவேண்டியது இல்லை. டெல்லி தலைமையுடன் தான் பேசுவோம் எனவும் அதிமுக அவ்வப்போது அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுத்து இருந்தது.

இதன்பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அதன்பிறகு தங்களுக்குள் மோதல் எதுவும் இல்லை என்பதாக அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியும் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினர். இருந்தாலும் அண்ணாமலை கருத்துக்கள் அவ்வப்போது அதிமுகவை சீண்டும் வகையிலேதான் இருந்தது.

இந்த நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அண்ணாமலை பேட்டி அளித்து இருந்தார். அந்த பேட்டியில் அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சி நடத்திய கட்சிகள் ஊழலில் ஈடுபட்டதாக பேசியிருந்தார். அப்போது, அதிமுக குறித்தும் பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பொதுமக்களின் பணத்தை முறைகேடு செய்த எந்த ஒரு கட்சியையும் நான் சொல்கிறேன். அது எல்லாக் கட்சிக்கும் பொருந்தும்" என்றார்.

அதேபோல், 1991-96 வரையில் இருந்த அதிமுக ஆட்சி ஊழல் குறித்து மிகவும் விமர்சிக்கப்பட்டது.. அதுபற்றிய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அண்ணாமலை, இங்கே இருக்கும் ஆட்சி எல்லாமே ஊழல் செய்யும் ஆட்சியாகத்தான் உள்ளது. முன்னாள் முதல்வரே ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்று ஜெயலலிதா குறித்து விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.

அண்ணாமலையின் இந்த பேட்டிதான் அதிமுகவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வெண்டும். இது மாதிரி தொடர்ந்து பேசினால் கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்வோம் என மிககாட்டமாக பேசியிருக்கிறார்.

AIADMK firmly oppose TN BJP Leader Annamalai: These are the reasons

தமிழகத்தில் 25 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் போது பேசியிருந்தார். அமித்ஷாவின் இப்படி பேசியதற்கு மறுநாளே அண்ணாமலைக்கு எதிராக நேரடியாக அதிமுக போர்க்கொடி தூக்கியிருப்பது, அண்ணாமலையின் இந்த போக்கு நீடித்தால் கூட்டணியை மறு பரிசீலனை செய்வோம் என நேரடியாக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் சென்னை, ஈரோடு, நெல்லை உள்ளிட்ட தொகுதிகளை பாஜக குறிவைத்து காய் நகர்த்தி வரும் நிலையில், தற்போது பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனியாக போட்டியிடக்கூட அதிமுக தயார் ஆவதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுவதாக இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+