சமரசம் ஆன டிடிவி தினகரன் - அதிமுக.. 2018 பசும்பொன் வழக்கு ரத்து.. செலவாக ரூ.50,000 செலுத்த உத்தரவு!
சென்னை: 2018 ஆம் ஆண்டு பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக கொடியை சேதப்படுத்தியதாக டிடிவி தினகரனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. புகார்தாரர் மற்றும் டிடிவி தரப்பினர் சமரசம் செய்து கொண்டதை தொடர்ந்து வழக்கை ரத்து செய்து, வழக்கு செலவாக ரூ.50,000 செலுத்த தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்குச் சென்றார். அவருடன் நூற்றுக்கணக்கான அமமுக தொண்டர்களும் சென்றனர். முன்னதாக, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அவர்களை வரவேற்கும் விதமாக வழியெங்கும் ஓபிஎஸ் - எடப்பாடி படங்களுடன் அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பசும்பொன்னுக்கு டிடிவி தினகரன் வந்த போது அவர்களுடைய ஆதரவாளர்கள் தினகரன் முன்னிலையிலேயே அதிமுகவின் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். அதிமுக கொடியையும் சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அமமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனால், போலீசாருக்கும் அமமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கயிறு மூலம் அமமுக தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர், அங்கிருந்து அமமுகவினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், பசும்பொன்னில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு பசும்பொன்னில் அதிமுக கொடியை சேதப்படுத்தியதாக டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாக உயர் நீதிமன்றத்தில் புகார்தாரர் அதிமுக நிர்வாகி முனியசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதனை அடுத்து, டிடிவி தினகரன் மீது கமுதி போலீசார் பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். புகார்தாரர் மற்றும் டிடிவி தரப்பினர் சமரசம் செய்து கொண்டதை தொடர்ந்து வழக்கை ரத்து செய்து, வழக்கு செலவாக ரூ.50,000 செலுத்த தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா












Click it and Unblock the Notifications