ரியாக்சன் செய்ய முடியாத நிலை.. அண்ணாமலை ஃபீலிங்! யார் காதுல பூ சுத்துற? காயத்ரி ரகுராம் காட்டம்..!
சென்னை: தன் வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுகள் மிகவும் கடினமான காலம், 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன் எனவும், அரசியலில் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் மனதில் தோன்றியது உண்டு, எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என பேசியிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் எல்லாமே அண்ணாமலைக்கு ஓசியில் கிடைத்தது எனவும், 3 யார் காதுல பூ சுத்துற? என விமர்சித்துள்ளார் நடிகையும், அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம்.
கோவை குஜராத் சமாஜத்தில் இன்று தன்னார்வலர்கள் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கு பணியாற்றியபோது பாஜக களப்பணியாளர்கள் 28 நாட்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர்.
மக்கள் அருகில் சென்று அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடிந்தது. இதில் பல சம்பவங்களை அனைவரும் சந்தித்தீர்கள். பலமுறை பலர் போலீஸ் நிலையங்களில் அமர வைக்கப்பட்டனர். அதுபோன்ற நேரங்களில் எல்லாம் எனக்கு தகவல்கள் பலரிடம் இருந்து கொந்தளிப்பதாக வந்து கொண்டிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக தோல்வி என்று சொல்லக்கூடாது. பாஜகவினர் பணத்துக்காகவோ, பதவிக்காகவோ எதையும் எதிர்நோக்குபவர்கள் அல்ல. நாட்டு முன்னேற்றத்தை மட்டுமே கொண்டு உழைப்பவர்கள்.
பாஜக தலைவர்கள் பலர் சொத்துக்களை இழந்துள்ளனர். நாம் சில நேரம் கால்களை பின்னால் வைக்க நேரிடும். சில சமயம் காலை முன்னால் வைக்க வேண்டும். எப்போது முன்னால் வைக்க வேண்டும், எப்போது பின்னால் வைக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும்.அரசியலில் சகிப்பு தன்மை, பொறுமை, சமரசம் மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, நமது கட்சியில் இருப்பவர்கள் கூட குறைகூறிக் கொண்டு தான் இருப்பார்கள். அரசியலில் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் மனதில் தோன்றியது உண்டு, எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.
அனைத்தும் சகித்துக் கொள்ளும் தன்மை வேண்டும். எப்போதும் 5வது கியரிலும் செல்லக் கூடாது. முதல் கியரிலேயே சென்று கொண்டும் இருக்கக் கூடாது. அரசியலில் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் மனதில் தோன்றியது உண்டு. எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். தனித்தன்மை இழக்காமல் இருக்க வேணடும் என்றால் கட்சியில் இணையாமல் செயல்பட வேண்டும். தனி மனிதனாக சமுதாயத்திற்கு வேலை செய்து கிடைக்கும் மகிழ்ச்சி, எதற்கும் ஈடு ஆகாது. என் வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுகள் மிகவும் கடினமான காலம். 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் இல்லை" என கூறினார்.
இந்நிலையில் எல்லாமே அண்ணாமலைக்கு ஓசியில் கிடைத்தது எனவும், யார் காதுல பூ சுத்துற? என விமர்சித்துள்ளார் நடிகையும், அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," எல்லாம் ஓசியில் அவனுக்கு கிடைத்தது. அது எவ்வளவு கடினமானது? மிகவும் கடினமானது. ஜோக்கர். 3 வருடங்கள் 10000 கோடிகள் OC போஸ்டிங் தானே. நீ யாரை ஏமாற்றுகிற? யார் காதுல பூ சுத்துற?" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை அதிமுகவினர் பகிர்ந்து வரும் நிலையில், கமெண்டில் விமர்சித்து வருகின்றனர் பாஜகவினர்.












Click it and Unblock the Notifications