அதிமுகவினருக்கு பறந்த அழைப்பு.. டிச.10-ல் பொதுக்குழு, செயற்குழு கூட்டம்! முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி
சென்னை: டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு நடைபெறும் என்றும், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாருவெங்கடாஜலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆண்டுதோறும் அரசியல் கட்சிகள் பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டியது அவசியம். அந்த வகையில், அதிமுகவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டும் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக, மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறி வருகிறது. ஆனாலும் அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பது இன்னும் முழுமையாக தெரிவியவில்லை.
விஜய்யுடன் கூட்டணி அமைக்க அதிமுக ஆர்வம் காட்டுவதாக கூறப்பட்டாலும், விஜய் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அறிவித்துவிட்டார். எனவே, இந்த பொதுக்குழுவில் கூட்டணி விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் மிக மூத்த தலைவரான செங்கோட்டையன் நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு என்பதால், அதிமுக உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேசப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications