Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முந்திய ஓபிஎஸ்.. பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பரபர கடிதம்.. இபிஎஸ் தரப்புக்கு செக்?

கடந்த ஆண்டு ஜூலை 11-ந் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு ஜூலை 11-ந் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுகவில் தலைமை பதவியை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே போட்டி ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஜுலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கு

ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனது ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த ஓபிஎஸ்

ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த ஓபிஎஸ்

இந்த மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து ஒ பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக. எடப்பாடி பழனிசாமி கைவாசம் சென்றுள்ளது. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு..

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு..

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் இரவு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்று குறிப்பிட்டு ஓ பன்னீர் செல்வம் அனுப்பிய அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்படவில்லை. இந்த பதவிகளுக்கான காலம் 2026 -வரை உள்ளது.

ஏற்றுக்கொள்ள கூடாது

ஏற்றுக்கொள்ள கூடாது

எனவே அதிமுக பொதுக்குழுவில் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்பபடையில் சட்ட விதிகளில் எந்தவித திருத்தமும் செய்யக்கூடாது. இந்த திருத்தங்களை ஏற்றுக்கொண்டால்அது நீதிக்கு அப்பாற்பட்டது. அது மட்டும் இன்றி என்னுடைய சட்டப்பூர்வமான உரிமையை பாதிக்கும். எனக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தும். ஆகவே, ஜூலை 11-ந் நடந்த பொதுக்குழு தீர்மானங்களையும், கட்சி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஏற்றுக்கொள்ள கூடாது" என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

என்ன மாதிரியான முடிவை எடுக்கும்?

என்ன மாதிரியான முடிவை எடுக்கும்?

உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியதையடுத்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி சிவி சண்முகம் உள்பட வழக்கறிஞர்கள் குழு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகி முறையிட திட்டமிட்டுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதத்தை எழுதியுள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+