ஓபிஎஸ்க்கு கதவுகள் அடைப்பு .. அதிமுக பொதுக்குழு சொல்வது என்ன? பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பு இல்லை என்பதையே பொதுக்குழு தீர்மானம் காட்டுவதாக பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அமித்ஷாவின் வியூகத்திற்கு அதிமுக எதிராக இருப்பதாக பார்க்கப்படும் நிலையில், ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்தாலும் கூட அவர் சார்ந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுப்பதிலும் சிக்கல்தான் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை மீண்டும் இணைப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக பொதுக்குழுவில் அதற்கான செயல்பாடும் இருந்ததாக தெரியவில்லை.

தீர்மானங்களில் கூட எடப்பாடி பழனிசாமிக்கே கூட்டணி குறித்து முழு அதிகாரம் வழங்கப்பட்டது. அதேபோல் துரோகிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்தனர். இதனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்புகள் இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், அதிமுக பொதுக்குழுவில் 2 தீர்மானங்களை முக்கியமாக கருதலாம். ஒன்று அதிமுக தலைமையில் கூட்டணி.. அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி கட்சிகள் தொடர்பாக முடிவெடுக்க கூடிய அதிகாரம். என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில் இயங்குகிறது.
தற்போதைய சூழலில் இந்த கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக இருக்கின்றன. விரைவில் அன்புமணி தலைமையிலான பாமக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிற சிறிய கட்சிகள் வருவதில் பெரிய ஆட்சேபணை இல்லை. ஆனால் இந்த 2 தீர்மானம் மூலமாக சசிகலா, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்க்கப்படுவார்களா என்பதே கேள்வி. இதனை எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுக்கும் இடத்தில் உள்ளார்.
அதேபோல் ஓபிஎஸ் அதிமுகவில் இணைந்தால், அவர் சார்ந்தவர்களுக்கு பதவிகளும், தொகுதிகளும் ஒதுக்க வேண்டும். அதில் சிக்கல் உள்ளது. அதனால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்கும் எண்ணமே இல்லை என்பதே சூசகமாக கூறி இருக்கிறார்கள். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவை பொறுத்தவரை திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதனால் அதிமுகவில் தற்போதைய நிலை தொடர்கிறது என்றே பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
-
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
"ஓபிஎஸ் என்னை கைவிட்டுவிட்டார்!" ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் முக்கிய தகவலை சொன்ன உசிலம்பட்டி ஐயப்பன்? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது












Click it and Unblock the Notifications