ஜூலை 11-ல் அதிமுகவில் மீண்டும் பொதுக்குழு.. கோபப்பட்ட ஓபிஎஸ்.. கோஷமிட்டபடி பாதியிலேயே வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழு மீண்டும் கூடும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். ஆனால் இதற்கு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Recommended Video

    OPS கோபம்....கோஷமிட்டபடி பாதியிலேயே வெளிநடப்பு | ADMK பொதுக்குழு | * Politics

    அதிமுக பொதுக்குழு கூட்டம் இப்போது விறுவிறுப்பக்க நடந்து கொண்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடர வேண்டிய தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்தார் . இந்த தீர்மானத்தை ஜெயக்குமார் வழிமொழிந்தார்.

     என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    இதையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முன்னதாக இந்த அறிவிப்பின் போது அவர் மீது மாலை போட வந்த நிர்வாகிகளை.. இருங்கப்பா .. நீங்க வேற.. பேச விடுங்க என்று கோபமாக எடப்பாடி பழனிசாமி கடுப்படித்தார். இதையடுத்து அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ஒற்றை தீர்மானத்துடன் அடுத்த கூட்டம் நடைபெறும் என்று கேபி முனுசாமி அறிவித்தார்.

    நிராகரிப்பு

    நிராகரிப்பு

    23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது, என்றைக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் வருகிறதோ அன்றைய பொதுக்குழுவே உண்மையான ஒன்று. இப்போது நடப்பது உண்மையான பொதுக்குழு கிடையாது என்று கே.பி.முனுசாமி அறிவித்தார். அவரை தொடர்ந்து சிவி சண்முகமும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக மேடையிலேயே கடும் ஆவேசத்துடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரட்டை தலைமையால் செயல்பட முடியவில்லை- ஒருங்கிணைப்பு இல்லை- தொண்டர்களிடம் சோர்வு உள்ளது.

     மீண்டும் கூட்டம்

    மீண்டும் கூட்டம்

    அதிமுகவை காப்பற்ற இரட்டை தலைமை நீக்கப்பட வேண்டும் என்று சிவி சண்முகம் கூறினார். தமிழக சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கட்சியின் பொதுக்குழுவில் ஒட்டுமொத்த தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தீர்மானங்கள் மொத்தமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், பேசிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவித்தார். ஆனால் இதற்கு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    ஓபிஎஸ் எதிர்ப்பு

    ஓபிஎஸ் எதிர்ப்பு

    சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு இது. கோர்ட் தீர்ப்பிற்கு எதிரான செயல்பாடு இது என்று வைத்தியலிங்கம் கூறிய நிலையில் ஓபிஎஸ்,வைத்தியலிங்கம் வெளிநடப்புசெய்தனர். இதையடுத்து வனாகரத்தில் இருந்து ஓ பன்னீர்செல்வம் வெளியேற கார் நோக்கி சென்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி ஆதரவாளர்கள் மூலம் தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் பதில் எதுவும் அளிக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+