அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடக்குமா? "விடாத ஓபிஎஸ்" தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதம் என்றும், சட்டத்திற்கு புறம்பாக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ள ஓ பன்னீர் செல்வம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த பொதுக்குழுவை எதிர்த்த ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

 பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல்

பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல்

பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் உற்சாகம் அடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தீவிரம் காட்டியது. அந்த வகையில், கடந்த வாரம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 எடப்பாடி வேட்பு மனு தாக்கல்

எடப்பாடி வேட்பு மனு தாக்கல்

அதிமுக சட்ட திட்ட விதிகளின்படி, அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது எனவும் இதற்கான வேட்புமனு தாக்கல் 18, 19-ந்தேதிகளில் (இன்றும், நாளையும்) நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் நாளான இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்வார்.

உயர்நீதிமன்றத்தில் மனு

உயர்நீதிமன்றத்தில் மனு

எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வர மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனிடையே, பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்துவதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றமும் ஒப்புக்கொண்டுள்ளது.

 தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம்

இந்த நிலையில், பொதுச்செயலாளர் தேர்தல் சட்ட விரோதமாக நடப்பதாக கூறி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் ஓ பன்னீர் செல்வம் இன்று கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவித்தது சட்டத்திற்கு புறம்பானது எனவும் தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்கக் கோரியும் தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

 செல்லாது என அறிவிக்க வேண்டும்..

செல்லாது என அறிவிக்க வேண்டும்..

ஓபிஎஸ் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சட்ட விரோதமாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அங்கீகரிக்கக் கூடாது. அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஆலோசிக்காமல் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது" என ஓபிஎஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவையும் தனது கடிதத்தில் ஓ பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+