சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவை ஒதுக்கி ஓரம்கட்ட.. அதிமுகவுக்குள் ஓடிகொண்டிருக்கும் 2 மாஸ்டர் பிளான்.. அதிரவைக்கும் ஸ்கெட்ச்

முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுகவுக்குள் பேச்சு நடந்து வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: "ஓஹோ.. திமுகவை காலி செய்ய இப்படி ஒரு மாஸ்டர் பிளான் அதிமுகவுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறதா என்று ரத்தத்தின் ரத்தங்கள் ஆச்சரியப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.. அது இரட்டை தலைமை மற்றும் முதல்வர் வேட்பாளர் பதவி குறித்துதான்!

முதல்வர், துணை முதல்வர் என்ற 2 பெரும் ஆளுமைகளின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது.. ஆளுக்கு ஒரு பக்கம் அதிகாரங்களை கையில் வைத்துள்ளனர் என்றும், அதன்படியே மா.செ.க்கள் முதல் நிர்வாகிகள் செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால், இப்போது பிரச்சனை வெடித்து கிளம்ப தொடங்கி விட்டது.. இதற்கு காரணம், சட்டசபை தேர்தலை அனைவரும் எதிர்நோக்கி உள்ளதுதான்.. அதற்கான வியூகங்களை எல்லா கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.. கூட்டணி சம்பந்தமான பேச்சும் பகிரங்கமாக வெளியே வந்துவிட்டது. அதனாலேயே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் விவகாரம் எழுந்து, அது தேனி தொகுதி போஸ்டர் விவகாரங்கள் வரையும் கிளர்ந்தெழுந்தது.

காரில் வருவது முதல்வர்.. காரை தொட்டு கும்பிட போவது யார்னு பாத்தீங்களா.. வைரல் போட்டோ.. இது உண்மையா?காரில் வருவது முதல்வர்.. காரை தொட்டு கும்பிட போவது யார்னு பாத்தீங்களா.. வைரல் போட்டோ.. இது உண்மையா?

 முரண்கள்

முரண்கள்

இப்படி சொந்த கட்சிக்குள்ளேயே இத்தனை முரண்கள், வேறுபாடுகள் இருந்தால், அது எதிர்க்கட்சியான திமுகவுக்குதான் சாதமாக போய் சேரும் என்று பல அதிமுக மூத்த தலைகள் எடுத்து கூறி, இரு ஆளுமைகளுக்கும் சமாதான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அப்போது முதல், 2 விஷயங்களை அதிமுக தரப்பு யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ங

 கண்டிஷன்கள்

கண்டிஷன்கள்

முதலாவதாக, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியையே அறிவிக்க வேண்டும் என்றும், ஓபிஎஸ் ஏற்று கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டதாம்.. அதற்கு ஓபிஎஸ், தன் மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சரவையில் இணைக்க வேண்டும், அடுத்து அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் தான் கேட்ட துறை தனக்கு தரப்பட வேண்டும் என்று 2 கண்டிஷன்களை போட்டாராம்.

 இணக்கம்

இணக்கம்

இதற்கு எடப்பாடி தரப்பு ஒப்புக் கொள்ளுமா என்று தெரியவில்லை. ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜக சுமூகமாக இருந்தால், கூட்டணியும் இணக்கமாக இருந்தால் மட்டுமே ஓபிஆருக்கு சீட் வாங்கி தர முடியும்.. போகிற போக்கை பார்த்தால், பாஜகவை அதிமுக கழட்டிவிடும் என்றும் சொல்கிறார்கள்.. எனினும், மேலிட நெருக்கடி காரணமாக பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்ளப்பட்டால் ஓபிஎஸ்-ன் 2 கண்டிஷன்களும் ஓகே ஆகும்.. மறுபடியும் எடப்பாடியே முதல்வர் ஆவார் என்கிறார்கள்.

கட்சிகள்

கட்சிகள்

இரண்டாவதாக, இன்னொரு பிளான் செய்யப்பட்டு வருகிறதாம்.. அதன்படி, கூட்டணி மற்றும் சாதீய கட்சிகளுக்கு34 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மிச்சமிருக்கும் 200 தொகுதிகளில், அதிமுக போட்டியிடுவது.. இந்த 200 தொகுதிகளையும், துணை முதல்வரும், முதல்வரும் சமமாக பிரித்து , தங்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வைப்பது.. இறுதியில், யாருடைய ஆதரவாளர்கள் அதிக அளவு பெற்றி பெறுகிறார்களோ, அவருக்குதான் முதல்வர் பதவியாம்.

திமுக

திமுக

இப்படியும் ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது.. இது சம்பந்தமாகவும் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையும் நடக்கிறதாம்... ஆக மொத்தம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே அதிமுகவுக்கு மறுபடியும் ஆள முடியும், திமுகவையும் தோற்கடிக்க முடியும் என்ற யதார்த்த உண்மையை மட்டும் உணர்ந்துகொண்டுள்ளது.

English summary
AIADMK has some secret plans to win Assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X