10 நாட்களுக்கு பிறகு அகற்றப்பட்ட சீல்.. எடப்பாடி வசமான அதிமுக தலைமை அலுவலகம்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு அதன் சாவி எடப்பாடி பழனிச்சாமியின் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அதிமுக உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறிய நீதிமன்றம் அதிமுக பொதுக் குழுவை அக்கட்சியின் சட்டவிதிகளின் படி நடத்திக் கொள்ள தடை ஏதும் இல்லை என தீர்ப்பளித்தது.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற கடந்த 11-ஆம் தேதி ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் விரைந்தார். இதையறிந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கு கூடினர்.

தள்ளுமுள்ளு
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வன்முறை சம்பவமும் ஏற்பட்டு பல தொண்டர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் நுழைந்தார். இதன் பின்னர் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் இருந்தது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று சீல் வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக தலைமை அலுவலகம்
இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது இரு தரப்பு விவாதங்களும் அனல் பறந்தன. இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை என்பதால் சீலை அகற்றினால் அப்பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என காவல் துறை அறிக்கை தாக்கல் செய்தது.

அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்ற வழக்கு
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்ற கோரி தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

இன்று திறப்பு
மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அலுவலகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. முதலில் அலுவலக வாயிலில் இருந்த சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் அகற்றினார். இதையடுத்து தலைமை அலுவலகத்தின் சாவியானது வருவாய்த் துறையினரிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமியின் மேனேஜர்கள் மகாலிங்கம், மனோகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
-
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர்












Click it and Unblock the Notifications