ஆண்மை இருக்கா? சீண்டிய நயினார்.. கொதித்த அதிமுக தலைகள்.. டெல்லிக்கு பறந்த புகார்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் "ஆண்மை இல்லை" கருத்துக்கு அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவாகரம் தொடர்பாக டெல்லி வரை புகார்கள் சென்றதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று பாஜகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவியின் தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் நிலவி வருகின்றது.

 மாணவி மரணம்

மாணவி மரணம்


ஒரு பக்கம் பள்ளி ஆசிரியர்கள் சிலர் அந்த மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் மாணவிக்கு அந்த ஹாஸ்டல் வார்டன் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது மாணவியை சுத்தம் செய்யும் வேலை வாங்கி வார்டன் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் தமிழ்நாடு பாஜக தொடர்ந்து தீவிரமாக கருத்து தெரிவித்து வருகிறது.

 பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

இந்த நிலையில் தஞ்சாவூர் பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்று பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. பாஜக தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அடையாள உண்ணாவிரத போராட்டமாக இது நடைபெற்றது.

 போராட்டம்

போராட்டம்

இந்த போராட்டதில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய விஷயங்கள்தான் சர்ச்சையாகி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அச்சமின்றி கேள்வி எழுப்பி வருகிறார். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

 அதிமுக எதிர்ப்பு

அதிமுக எதிர்ப்பு

இந்த நிலையில் அதிமுகவை இந்த கருத்து கடுமையாக சீண்டி உள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக கட்சியின் மூத்த எம்எல்ஏ இப்படி பேசுவது அதிமுக தலைமையை கடுமையாக சீண்டி உள்ளது. அதிமுக தலைமை இதற்கு நேரடியாக பதில் அளிக்காத நிலையில் அதிமுக நிர்வாகிகள் பலர் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக அதிமுக ஐடி விங்கை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கடுமையாக பதில் அளித்து வருகிறார்கள்.

 அதிமுக ஐடி விங்

அதிமுக ஐடி விங்

அந்த வகையில் அதிமுகவின் மதுரை ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், அண்ணன் நயினார் நாகேந்திரன், நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் ....??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்....!!, என்று குறிப்பிட்டு நயினார் நாகேந்திரனுக்கு சவால் விட்டுள்ளார். அதிமுகவினர் பலர் இதே சவாலை நயினாருக்கு விடுத்துள்ளனர்.

சவால்

சவால்

நீங்கள் அதிமுக கூட்டணியில் நின்று பாஜக சார்பாக வெற்றிபெற்று உள்ளீர்கள். இந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி முடிந்தால் வெற்றிபெறுங்கள்.. பாஜக எம்எல்ஏக்களால் அதிமுகவின் உதவி இன்றி வெற்றிபெற முடியுமா என்று அதிமுக நிர்வாகிகள் பலர் இணையத்தில் சவால் விடுத்து வருகிறார்கள். அதிமுகவினர் மத்தியில் இவரின் பேச்சு கடும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 புகார்

புகார்

இந்த நிலையில்தான் அதிமுக தலைமை சார்பாக சிலர் டெல்லியில் இந்த விஷயத்தை பற்றி பேசி உள்ளனர். டெல்லி பாஜக வட்டாரத்தில் இதை பற்றி கவலையாக குறிப்பிட்டுள்ளனர். நாம் இப்போதும் கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால் கூட்டணி தலைவர்களை மதிக்காமல் பொது இடத்தில் ஒருவர் இப்படி பேசுவது எப்படி சரியாக இருக்கும். டெல்லி தலைமை இதை கேள்வி கேட்க வேண்டும், என்று அதிமுக சார்பாக டெல்லி பாஜக மேலிடத்தில் முறையிடப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.

 டெல்லி மேலிடம்

டெல்லி மேலிடம்

அதோடு இப்படியே போனால் நகராட்சி தேர்தலில் கூட்டணியில் தொடர்வது கூட சிக்கலாகிவிடும் என்றும் பாஜக மேலிடத்தில் அதிமுக முறையிட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்தே டெல்லி மேலிடமும் நேரடியாக இதில் தலையிட்டு, உடனே பிரச்னையை தீர்க்க உத்தரவிட்டுள்ளது. நயினார் தனது கருத்துக்கு விளக்கம் அளித்தால் பிரச்சனை சுமுகமாக முடியும் வாய்ப்பு உள்ளதாக ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறதாம். இதையடுத்தே பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு விளக்கம் அளித்தார் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    நெல்லையில் பாஜகவுக்கு ஆளே இல்ல.. நாங்கதான் நயினார் நாகேந்திரனை ஜெயிக்க வச்சோம்.. அதிமுக விமர்சனம்
     விளக்கம்

    விளக்கம்

    அவர் அளித்த விளக்கத்தில், இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!!, என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இப்படி விளக்கம் அளிக்கப்பட்டாலும்.. அதிமுக இந்த கருத்தால் கொதிப்பில்தான் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+