திமிறி எழுந்த அதிமுக.. சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக மனிதசங்கிலி போராட்டம்.. எடப்பாடி அதிரடி
சென்னை: சொத்து வரி அதிரடியாக உயா்த்தப்பட்டுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சொத்துவரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த மனித சங்கிலிப் போராட்டத்தை இன்று அதிமுக நடத்தியிருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை 6 % உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு காரணம் , மாநில அரசு சார்பில் இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு பணிகளுக்கு சென்னை மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சொத்துவரி: கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு சென்னை மாநகராட்சி மக்களுக்கு அதிர்ச்சியை தந்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
பேரிடி: "ஸ்டாலினின் திமுக ஆட்சியில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடித்தள மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஸ்டாலினின் திமுக ஆட்சியின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் இந்த ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை
40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில், அக்டோபர் 8 ம்தேதி காலை 10.30 மணியளவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.
அழைப்பு: ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும், மக்கள் நலனை முன்வைத்தும் அதிமுக சார்பில் நடைபெற உள்ள இந்த மனித சங்கிலி போராட்டத்தில், கட்சியினர், விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும்" என்று தன்னுடைய அறிக்கையில் அறைகூவல் விடுத்திருந்தார்
அதன்படியே இன்றைய தினம் அதிமுக மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியதை.. மாநகராட்சிக்குட்பட்ட வட்டங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் இன்று காலை 10.30 மணி அளவில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.
சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டதில் ஈடுபட்டனர்.
மாநகராட்சிக்குட்பபட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது. அதிமுகவிலுள்ள 82 மாவட்ட செயலாளர்களும் இன்று தங்களது பகுதியில் மனித சங்கிலி போராட் டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள். அனைத்து மாநகராட்சி பகுதிகள் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இன்று அதிமுகவினர் நடத்திய போராட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications