சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன?
சென்னை: சென்னையில் அதிமுக நேரடியாக போட்டியிட உள்ள 13 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ராயபுரம் தொகுதியில் மட்டும் ஜெயக்குமார் மீண்டும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 12 தொகுதிகளில் யார் யாருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 23 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போது 127 பேர் கொண்ட 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

இதில் மொத்தமாக 17 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 46 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13ல் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. சைதாப்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகள் அமமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 13 தொகுதிகளில் ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார் மீண்டும் களமிறங்குகிறார். ஆனால் விருகம்பாக்கம், கொளத்தூர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், வில்லிவாக்கம், திரு.விக.நகர், எழும்பூர், அண்ணா நகர், வேளச்சேரி, தி நகர், ஆர்கே நகர் உள்ளிட்ட தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.
சென்னையில் திமுக ஆதிக்கம் காரணமாக, இந்த 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் திமுக வேட்பாளர்கள் பட்டியலை பொறுத்து இந்த 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
சென்னையில் அதிமுக கோஷ்டி பூசல் இருப்பதால், கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிப்பை வெளியிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளார். இதனால் சென்னை அதிமுகவில் யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிகரித்துள்ளது. ஏற்கனவே வளர்மதி அண்ணா நகரிலும், கோகுல இந்திரா ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக பேசப்படுகிறது.
அதேபோல் திரு விக நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் மட்டும் ஏன் எடப்பாடி பழனிசாமி தாமதம் செய்கிறார் என்ற கேள்வியும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
-
சீட் ஒதுக்கப்பட்ட பிறகு அப்செட்.. அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்? புரட்சி பாரதம் இன்று முடிவு! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்?












Click it and Unblock the Notifications