"அதிமுகவை பார்த்தாலே பாவமா இருக்கு!" டிஆர்பி ராஜா அடுத்து சொன்ன வரியை நோட் பண்ணுங்க
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஓராண்டுக்கு மேல் இருந்தாலும் கூட இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. குறிப்பாகக் கூட்டணி குறித்த கணக்குகள் சைலண்டாக நடந்து வருகிறது. அதிமுக தனது கூட்டணியில் மேலும் பல கட்சிகளைக் கொண்டு வர முயன்று வருகிறது. இதற்கிடையே அதிமுகவைப் பார்த்தாலே பாவமாக இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா காட்டமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல்- மே மாதம் தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எப்போதும் டிசம்பர் போலத் தான் அரசியல் களம் சூடுபிடிக்கும். ஆனால், இந்தாண்டு இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. பல்வேறு கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர். மக்களிடம் சந்தித்து பரப்புரையைத் தொடங்கிவிட்டன.

கூட்டணி கணக்கு
இது ஒரு பக்கம் இருக்கக் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. அதிமுக பாஜக தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் வேறு கட்சிகளைக் கொண்டு வரவும் முயற்சிகள் நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே கூட்டணிக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகை, தூத்துக்குடிக்கு அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து முதலில் விளக்கினார். அதேபோல வின்பாஸ்ட் தொழிற்சாலை எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது தான் அதிமுக குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அக்கட்சியைப் பார்க்கவே பரிதாபமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்
டிஆர்பி ராஜா
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, "இதுவரை பார்த்திராத வளர்ச்சியைத் தமிழ்நாடு இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாகத் திராவிட மாடல் ஆட்சியில் உலகமே பாராட்டும் அளவுக்குத் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி இருக்கிறது என்பதை எதிர்க்கட்சியும் ஒப்புக்கொள்ளும்.
தூத்துக்குடியில் பிரம்மாண்டமான முறையில் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை அமைகிறது. வெறும் 15 மாதங்களில் அனைத்து அனுமதிகளும் கொடுக்கப்பட்டு கட்டுமானம் நடந்து முடிந்துள்ளது. ஒப்பந்தம் முதல் திறப்பு விழா வரை 18 மாதங்கள் மட்டுமே ஆனது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு பெரிய கார் நிறுவனத்தின் ஆலை அமைவது இந்தியாவிலேயே இதுவே முதல்முறை! இதற்கு முதல்வரின் உழைப்பே காரணம்! வரும் 4ம் தேதி இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது.
வின்ஃபாஸ்ட் காரின் விலை
வின்ஃபாஸ்ட் காரின் விலை மத்திய அரசின் வரிகளைப் பொறுத்தே இருக்கும். ஆனால், மார்கெட்டில் போட்டி அதிகமாகும். நல்ல வாகனங்கள் அதிகம் மார்கெட்டில் வரும். இதனால் கூடுதல் நிறுவனங்கள் தமிழகத்திற்கு வரும்.
தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியில் இப்போது கொஞ்சம் கொடுத்துள்ளனர். முதல்வரும், கல்வித் துறை அமைச்சரும் கேட்கும் நிதியையும் வழங்கினால் சந்தோஷமாக இருக்கும். தூத்துக்குடி வெள்ள பாதிப்பு நிவாரண தொகை அறிவிப்பையும் இன்று கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், ஒரு விஷயம் தூத்துக்குடிக்குப் பிரதமர் அறிவித்ததை விடப் பல பெரிய விஷயங்கள் காத்திருக்கிறது.
அதிமுகவைப் பார்க்கவே பாவமாக இருக்கு
கூட்டணி குறித்து தலைமை பேசும். ஆனால், ஒரு விஷயம்.. திருமாவளவனே பல முறை இது குறித்துப் பேசியுள்ளார். எதாவது ஒரு குழப்பம் ஏற்படாதா என்ற அற்ப ஆசையில் எதிர்க்கட்சியினர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாங்க வாங்கானு கடை விரித்து கூட்டணிக்கு அழைத்தாலும்.. யாரும் வருவதில்லை. எனவே, அவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது" என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications