பட்டுனு துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி.. வீடியோ பரவிய நிலையில் அதிரடி கைது!
கடலூர்: கடலூர் அருகே கை துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் எதிர் தரப்பினரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக ஐடி நிர்வாகி கோபாலிடம் இருந்து துப்பாக்கி மற்றும் குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு கிராமத்தை அடுத்து உள்ளது குழந்தைக்குப்பம். குழந்தைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 60), கடலூர் மேற்கு அதிமுக ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளராக உள்ளார். அவரது மகன் கோபால் (வயது 36), கடலூர் கிழக்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.

கிராவல் குவாரி நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபாலுக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கொஞ்சிகுப்பம் வினோத்துக்கும் இடையே கிராவல் குவாரி நடத்துவது சம்பந்தமாக இருவருக்கிடையே அடிக்கடி போட்டி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் தன் ஆதரவாளர்களுடன் குழந்தைகுப்பம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபால் ஆகியோரின் குவாரி பகுதியில் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் கிருஷ்ணமூர்த்தி மகன் கோபால் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை கையில் எடுத்து மிரட்டி உள்ளார். லைசன்ஸ் பெற்ற கைத்துப்பாக்கி என்ற போதிலும் பொதுவெளியில் எடுத்து அதை பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இந்த நிலையில் அதிமுகவினர் இரு பிரிவுகளாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதையும் உடன் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த நிலையில் அந்தக் காட்சிகள் தற்போது வைரலாக வலம் வருகிறது.
இந்நிலையில் பிஸ்டலை காட்டி எதிர்தரப்பினரை மிரட்டி தாக்கியது சம்பந்தமாக நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!












Click it and Unblock the Notifications